தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
அரசியல் கட்சியினர் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தநிலையில் வரும் 14ஆம் தேதி அன்று புதுக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொள்ள தவெக சார்பில் காவல்துறையில் அனுமதி கோரப்பட்டிருந்தது. காவல்துறை தரப்பிலும் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திடீரென புதுக்கோட்டை பிரச்சாரக் கூட்டத்தை விஜய் ரத்து செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அறந்தாங்கியில் நடைபெற இருந்த பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதே நாளான ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தர்மபுரியில் விஜய் ரோடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக பல்வேறு இடங்களில் அனுமதி கிடைத்திருந்தும் விஜய் பிரச்சாரத் திட்டங்களை ரத்து செய்து இருந்தது குறிப்பிடத்தகுந்தது. அதேபோல் நாளை திருவள்ளூரில் நடைபெற இருந்த பிரச்சார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி திருவள்ளூரில் ரோட் ஷோ நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
