Chandra Mangala Yoga 2026,நவம்பர் 1 முதல் 5 வரையிலான தேதிகளில் உருவாகும் சந்திர மங்கள, கஜகேசரி யோகம் : சுப பலனை பெற உள்ள ராசிகள் – chandra mangala and gajakesari yogas, november 1 to 5, 2026: zodiac signs that may experience positive results

ஜோதிடத்தில் படி சில கிரகங்களின் சேர்க்கை அற்புதமான யோகங்களை தரக்கூடியதாக இருக்கும். அந்த விதத்தில் நவம்பர் 1ஆம் தேதி சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்தின் நுழைய உள்ளார். அங்கு நீசநிலையில் சஞ்சாரம் செய்து வரக்கூடிய செவ்வாயுடன் இணைந்து சந்திர மங்கள யோகத்தையிம், நீசபங்க ராஜ யோகமும், தொடர்ந்து சிம்ம ராசியில் நுழையும்போது அங்கு குருவுடன் இணைந்து கஜகேசி யோகத்தையும் ஏற்படுத்த உள்ளார். இந்த கிரக நிலை மற்றும் யோகங்கள் காரணமாக எந்தெந்த ராசிகள் நன்மை பெறுவார்கள் என்று தெரிந்து கொள்வோம்.

2026 நவம்பர் மாத தொடக்கமே அமர்க்களமான பலன்கள் தரக்கூடிய யோகங்கள் உருவாக உள்ளன. நவம்பர் மாத தொடக்கத்தில் சந்திரன் கடக ராசியில் நுழைய உள்ளார். அங்கு சந்திரன் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும், அதனால் சந்திர மங்கள, நீசபங்க ராஜ யோகம் உருவாக உள்ளது. தொடர்ந்து சிம்ம ராசியில் அவர் மாறும் போது அங்கு குரு, கேதுவுடன் இணை உள்ளார். இதனால் கஜகேசரி யோகம் உருவாக உள்ளது. இது போன்ற யோகங்களால் தீபாவளிக்கு முன் பல்வேறு விதத்தில் லாபங்களையும், சுபயோக பலன்களையும் சில ராசிகள் அனுபவிக்க உள்ளனர்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு உங்களுடைய செல்வநிலையும், வசதிகளும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகளை நவம்பர் மாத தொடக்கத்தில் உருவாகும் யோகங்கள் தரக்கூடும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்ற வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களுடைய வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணியிடத்தில் இருப்பவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்புகள் அமையும். வியாபாரம் செய்யக்கூடியவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் புதிய திட்டங்களை வகுத்து செயல்படுவதால் எதிர்காலத்தில் அற்புத பலனை பெற முடியும். நீண்ட காலமாக நீங்கள் விரும்பிய இலக்கை அடைய முடியும்.

மேஷ ராசி

மேஷ ராசி அன்பர்களுக்கு உங்களுக்கு அற்புத பலன்களை தரும் விதத்தில் யோகங்கள் உருவாக உள்ளது. நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கும், அதன் மூலம் நல்ல முடிவுகளையும் பெறுகிறீர்கள்.

​குடும்பத்திலும், வேலை தொடர்பாகவும் சூழ்நிலை சாதகமாக இருக்கும். நன்கு சிந்தித்து நீங்கள் முதலீடு தொடர்பாக இருக்கக்கூடிய முடிவுகள் வருங்காலத்தில் லாபத்தை தரக்கூடியதாக அமையும். உங்கள் நிதி நிலையை பராமரிப்பதும், உங்கள் நிதி நிலையை பராமரிப்பதும் உறவுகளை மேம்படுத்தும் விதமாக எடுக்கும் உறவுகளை மேம்படுத்தும் விதமாக எடுக்கக்கூடிய முயற்சிகள் நல்ல பலனை தரும்.

கடக ராசி

கடக ராசி சேர்ந்த நண்பர்களுக்கு பல விதத்தில் முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக உங்களுடைய நிதி விஷயங்களில் முன்னேற்றம் தரக்கூடிய புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். நீண்ட காலமாக முடங்கிக் கடந்த திட்டங்களை நிறைவேற்ற முடியும். உங்களுடைய செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். வருமானத்தை அதிகரிக்கவும், புதிய வழிகளில் நீங்கள் சம்பாதிக்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பாக உங்களுடைய கடின உழைப்புக்கு ஏற்ற பலனும், அங்கீகாரமும் கிடைக்கும். மாணவர்களின் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

சிம்ம ராசி

நவம்பர் மாத தொடக்கத்தில் உங்கள் ராசியில் உருவாக கூடிய கஜகேசரி யோகம், உங்களுக்கு அற்புதமான சூழ்நிலையை தரும். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.மேலும் அதை சரியாக செய்து முடிப்பதற்கான ஆற்றலுடனும், திட்டங்களுடனும் செயல்படுவீர்கள். உங்களுடைய நிதிநிலை மேம்படக்கூடிய விதத்தில் புதிய வழிகள் திறக்கும்.

வியாபாரம் செய்யக் கூடியவர்கள் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பண்டிகை காலத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த காலத்தில் யோகங்களால் உங்களுக்கு கிடைக்க கூடிய லாபத்தை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நிதி நன்மை பெற முடியும்.

துலாம் ராசி

துலாம் ராசி நண்பர்களுக்கு உங்களுடைய தொழில் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உருவாகக்கூடிய யோகங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக அமையும். குறிப்பாக உங்களுடைய வசதி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு , நீங்கள் செய்யக்கூடிய தொழில், வேலை தொடர்பாக சாதகமான சூழ்நிலை உருவாகும்.

​வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்படுத்திய அதன் மூலம் வெற்றி காண்பீர்கள். செலவுகள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களுடன் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பதால் உங்கள் சூழ்நிலை மேம்படும். உழைப்புக்கும், சேமிப்புக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசி அன்பர்களுக்கு நன்மைகள் தரக்கூடிய யோகங்கள் மூலம் உங்களுடைய சூழ்நிலை மேம்படும். குறிப்பாக தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை காண்பீர்கள். நிதி ஆதாயம் அதிகரிக்கும். அதன் மூலம் உங்களுடைய முதலீடுகளும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. நீண்ட காலமாக தடைபட்டு வந்து திட்டங்களை மீண்டும் தொடங்குவதன் மூலம் சாதகமாக முடியும். உங்களை எடி வரக்கூடிய வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்திக் கொள்ளவும். உங்களுடைய திட்டமிடல் மற்றும் பொறுமையான செயல்பாடு மூலம் எதிர்பார்த்த முன்னேற்றத்தை பெற முடியும்.
குறிப்பு:

இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜோதிடத் தகவல்களும் தீர்வுகளும் ஜோதிடம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை. இவற்றுக்கு எந்த அறிவியல் சான்றும் இல்லை. இதை நம்பிக்கை மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே கருத்தில் கொள்ளவும். தனிப்பட்ட ஆலோசனை மற்றும் முழுமையான தகவல்களுக்கு ஒரு ஜோதிட நிபுணரை அணுகுவது சிறந்தது.

Source link