Diwali Month New Rules,தங்கம், பென்சன் ஆயுள் சான்றிதழ், சிலிண்டர் விலை – நவம்பர் மாதம் வரும் மிக முக்கிய மாற்றங்கள் – lpg cylinder price to pension life certificate these money related rules changing from 2026 november month

சிலிண்டர் விலை முதல் பென்சன் ஆயுள் சான்றிதழ் வரை.. பணம் சார்ந்த முக்கியமான விதிமுறை மாற்றங்கள் இதோ..!

​வருகிற நவம்பர் மாதம் பொதுமக்களுடைய குடும்ப பட்ஜெட்டை பாதிக்கும் வகையில் சில முக்கியமான மாற்றங்கள் வரவிருக்கின்றன. அது என்னென்ன மாற்றங்கள் என்று இங்கே நீங்கள் பார்க்கலாம்.

​

நவம்பர் மாத மாற்றங்கள்!

அக்டோபர் மாதம் முடிய இன்னும் சிஅல் நாட்களே இருக்கின்றன. நவம்பர் மாதத்தில் உங்கள் நிதி நிலையை நேரடியாகப் பாதிக்கக்கூடிய சில புதிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. நவம்பர் 1 முதல் உங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தக்கூடியவை, பணத்தைச் சேமிக்க அல்லது முதலீடு செய்வதற்கான வழிகள் என்னென்ன என்து குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

சிலிண்டர் விலை!

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்படும். அந் த வகையில் நவம்பர் மாதத்துக்கான புதிய விலைகள் நவம்பர் மாதம் 1ஆம் தேதி நிர்ணயம் செய்யப்படும். நவம்பர் மாதம் தீபாவளிப் பண்டிகை வருவதால் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சிலிண்டர் விலை குறைக்கப்படுமா என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் விலை மாற்றம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பென்சன் ஆயுள் சான்றிதழ்!

மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களது வருடாந்திர ஆயுள் சான்றிதழை நவம்பர் மாத இறுதிக்குள் தங்களுக்கு அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் ஓய்வூதியப் பணம் வழங்குவதில் தாமதம் அல்லது தடை ஏற்படலாம். நீங்கள் இந்தச் சான்றிதழை நேரில் வழங்கலாம்; அல்லது ஆதார் அடையாளத்துடன் ‘ஜீவன் பிரமாண பத்ரா வசதியைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம்; அல்லது அஞ்சல் துறையின் வீட்டு வாசலிலேயே வழங்கும் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசம்.

வருமான வரி தாக்கல் கெடு நீட்டிப்பு!

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), 2026-27 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட வருமான வரி தாக்கலுக்கான (ITR) காலக்கெடுவை அக்டோபர் 31-லிருந்து நவம்பர் 21 வரை நீட்டித்துள்ளது. வணிகம் அல்லது தொழில்முறை சேவைகள் மூலம் வருமானம் பெற்று, தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய வரி செலுத்துவோர், அபராதம் மற்றும் வரி நோட்டீஸ்களைத் தவிர்க்க இந்தக் கெடுவுக்குள் தாக்கலை முடிக்க வேண்டும். நிறுவனச் சட்டத்தின் கீழ் கணக்குகள் தணிக்கை செய்யப்படும் நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளுக்கும் இது பொருந்தும். வணிகங்களைப் பொறுத்தவரை, மொத்த விற்பனை அல்லது வருவாய் ரூ. 1 கோடியைத் தாண்டினால் வரித் தணிக்கை கட்டாயமாகும். எனினும், பணப் பரிவர்த்தனைகள் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் இந்த வரம்பு ரூ. 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழில்முனைவோருக்கு (Professionals), பொதுவான தணிக்கை வரம்பு ரூ. 50 லட்சமாகும்.

ஐடிபிஐ வங்கியை விலைக்கு வாங்கும் ஃபேர்பாக்ஸ்!

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை கனடாவைச் சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இது வங்கியின் கலைப்பு அல்ல; மாறாக இணைப்பு என்பதால் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள், நிலையான வைப்புநிதிகள், தொடர் வைப்புநிதிகள், நேரடிப் பயனாளர் பரிமாற்றங்கள் மற்றும் கடன்கள் ஆகியவை முன்பு போலவே தொடர்ந்து செயல்படும். தற்பொழுது இந்த ஒப்பந்தம் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

தங்கம் வாங்கும் போது HUID குறியீடு முக்கியம்!

தங்கம் வாங்குவோர் அதன் தரத்தை அறிய ஹால்மார்க் முத்திரையைப் பார்ப்பது வழக்கம். ஆனால் HUID குறியீட்டைச் சரிபார்ப்பதும் மிக முக்கியம். ஹால்மார்க் தனித்துவ அடையாள (HUID) எண் என்பது பி.ஐ.எஸ்முத்திரையிடப்பட்ட ஒவ்வொரு தங்க நகையின் மீதும் பொறிக்கப்பட்ட ஆறு இலக்க எழுத்து-எண் குறியீடாகும். இந்தக் குறியீட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் ‘BIS Care’ மொபைல் செயலி அல்லது ஆன்லைன் தளம் வழியாக நகையின் நம்பகத்தன்மையையும் தூய்மையையும் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்தியாவில் நுகர்வோரைப் பாதுகாக்கவும், தங்கச் சந்தையின் மீது நம்பிக்கையை அதிகரிக்கவும் தங்கத்திற்கு மட்டும் ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Source link