போட்டியின்போது செல்போன் பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் மானேஜர்: விளாசிய லலித் மோடி | IPl 2026

ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்.சி.பி. அணிகள் மோதிய ஆட்டம் நேற்று முன்தினம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் 202 இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் 18 ஓவரில் எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 11-வது ஓவரின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மானேஜர் ரோமி பிண்டர் செல்போனை எடுத்து பார்ப்பார். அதை அருகில் இருக்கும் சூர்யவன்ஷியும் எட்டிப்பார்ப்போர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின்போது வீரர்களோ, அணி ஸ்டாஃப்களோ குறிப்பிட்ட எல்லைக்குள் (வீரர்கள் அருகில்) போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இது வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் இடத்திற்கான நெறிமுறையை மீறுவதாகும். ஆனால், ஐபிஎல் நிர்வாகம் இதுகுறித்து இன்னும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஊழல் தடுப்பு நெறிமுறையை மீறியுள்ளதால், Anti-corruption குழு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டுள்ளதா என்பதை கண்டறிய anti-corruption குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “பிண்டர் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து பயன்படுத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஐபிஎல் விதிமுறைப்படி இது முற்றிலும் கூடாது. இதுவரை ஐபிஎல் ஊழல் தடுப்புக்குழு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இது உண்மையில் நடந்ததா? அப்படி நடந்திருக்காது என்று நம்புகிறேன். நடந்திருந்தால் ஐபிஎல் நிர்வாகக் குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Source link