அன்பில் மகேஷ் கைது : ஜெயலலிதா புகைப்பட விவகாரத்தால் புதிய சர்ச்சை-வார்த்தையை விட்ட திமுக ராஜீவ் காந்தி – dmk rajiv gandhi radhakrishnan reaction anbil mahesh arrest puzhal prison judicial custody november 6

திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி , சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் இதர சட்டப்பூர்வ சான்றிதழ்களை விரைவாகப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் அதிகமாகச் சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார்கள் கூறப்பட்டதைத் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அன்பில் மகேஷ் கைது

இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தனியார் பள்ளிகளின் நிர்வாகங்களை மிரட்டியும், அவசியமான அனுமதிகளை வழங்க லஞ்சம் பெற்றும் கோடிக்கணக்கில் சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இப்புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.

நள்ளிரவில் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்

காவல்துறையின் விரிவான விளக்கம்

அன்பில் மகேஸின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று திமுக வழக்கறிஞர்கள் வாதிட்ட நிலையில், காவல்துறை தரப்பில் முக்கிய விளக்கம் முன்வைக்கப்பட்டது. தனியார் பள்ளி அங்கீகார முறைகேட்டில் ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைத் தடயங்கள் சேகரிக்கப்பட்ட பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து சட்ட நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னரே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் போது எவ்வித அத்துமீறல்களோ, சட்ட விதிமீறல்களோ நிகழவில்லை என்பதை நீதிபதி முன்னிலையிலேயே அன்பில் மகேஸ் உறுதிப்படுத்தியுள்ளார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திமுக-கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசை விமர்சித்த ராஜீவ் காந்தி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் , முன்னாள் அமைச்சரைக் கைது செய்ய ஆளுநரின் ஓப்புதல் வாங்க வேண்டும் என்கிற சட்ட விதிமுறைகளை மீறியும். வழக்கறிஞர் அலுவலகத்தில் யாரையும் கைது செய்ய கூடாது என்கிற விதிகளை மீறியும் சட்டத்தின் எல்லைகளைத் தாண்டி அத்துமீறி இருக்கிறது இந்த Reels அரசு ! திராவிட முன்னேற்றக் கழகம் பொய் வழக்குகளுக்கும், அரசியல் பழிவாங்கல்களுக்கும் அஞ்சிப் பின்வாங்காது!! உச்சநீதிமன்ற மன்றத்தால் குற்றவாளி என தீர்ப்புக்கு உள்ளனா செல்வி ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை சட்டை பையில் வைத்து சுத்து ஊழல் அமைச்சர்களை அமைச்சரவையில் வைத்து கொண்டு யோக்கிய வேசம் போடுகிறார் விஜய்!! அதிகாரத்தின் ஆணவத்தால் ஜனநாயகத்தையும் சட்டத்தின் மாண்பையும் காலில் போட்டு மிதிக்கலாம் என்று நினைக்காதீர்கள். @TVKVijayHQமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காலம் பதில் சொல்லும்; மக்கள் தீர்ப்பளிப்பார்கள்! அவர் நினைத்திருந்தால் உச்சநீதிமன்றம் வரை சென்று ஜாமீன் கேட்டு முடிவெடுக்கும் வரையில் தலைமறைவாக இருந்திருக்கலாம். ஆனால், அவர் தந்தை பெரியாரின் போர்வீரன் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் பேரன்! எதையும் சட்டரீதியாக எதிர்கொள்ளத் துணிந்துதான் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று நெஞ்சுரத்தோடு கைதாகியிருக்கிறார்.போங்கடா… அன்பிலார் பேரன் எதையும் எதிர்கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

Source link