தமிழக முன்னாள் அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ததாகக் கூறி திமுகவினர் காட்டூர் ஆயில் மில்பகுதியில் உள்ள கலைஞர் சிலை முன்பு தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
முன்னாள் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் செய்வதாக கூறி தவெக அரசு நேற்று (26.10.2026) அவரை கைது செய்தது. இதனை கண்டித்து திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில்மில் பகுதியில் உள்ள கலைஞரின் உருவ சிலை முன்பு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சேகரன் தலைமையில் த.வெ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பகுதி செயலாளர்கள் நீலமேகம் , தர்மராஜ் சிவகுமார், ஏ.எம்.ஜி விஜயகுமார், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.எம். கருணாநிதி, கங்காதரன்,கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு கூத்தைபார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியதோடு தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய பகுதி நகர பேரூர் மாவட்ட நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை வலியுறுத்தினர்.
