சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக, 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றதாக, திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ், 48, நேற்று, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதற்கிடையே, மகேஷ் கைது செய்யப்பட்டதில் இருந்து, அவர் புழல் சிறை வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வரை, போலீசாரை சூழ்ந்த தி.மு.க.,வினர், கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
புழல் சிறையில் அடைப்பதற்கு சற்று நேரத்திற்கு முன், தி.மு.க.,வை சேர்ந்த, வேலுார் மாநகராட்சி கவுன்சிலரும், மகேஷ் ஆதரவாளருமான டீட்டா சரவணன், ‘கரூர் சம்பவத்தின் போதே, அவரை போட்டு இருந்தால், இந்த நிலைமை வந்திருக்குமா தலைவரே’ என, அவரிடம் ஆவேசமாக கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரில், சென்னை புழல் போலீசார், டீட்டா சரவணன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, டீட்டா சரவணன் தலைமறைவாகி விட்டார். அவர், வேலுார் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.
