புதுடில்லி: மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது

புதுடில்லி: மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பாஜவினரை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏப்.,18ல் கோவையில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்.

ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பா.ஜ., பொறுப்பாளர்களுடன் இணைந்து, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, மத்திய பா.ஜ., அரசின் திட்டங்கள் பற்றி விளக்கி கூறுமாறு, தமிழக பா.ஜ., நிர்வாகிகளை, பிரதமர் மோடி, ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறார். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜ., தொண்டர்களை உற்சாகப்படுத்த, ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக, பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 13), ‘ஆன்லைனில்’ உரையாடுகிறார்.


இது குறித்து, அவர் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது நமது தமிழக பாஜவினரை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நாளை மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது தொண்டர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கோவையில் ஏப்.,18 ல் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.

Source link