அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை

– நமது நிருபர் –

அதி தீவிர புயலாக ‘அர்னாப்’ ஏனாம், காக்கிநாடா அருகே கரையைக் கடந்து வருகிறது. ஆந்திராவில் மணிக்கு 165 கி.மீ., வேகம் வரை காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் – பபத்லா, ஏனாம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

3 மணி நேரம் நீடிக்கும்!

”அடுத்த 3 மணி நேரத்தில் காக்கிநாடா, கோனசீமா, மேற்கு கோதாவாரியில் சூறைக்காற்று வீசும்; அர்னாப் புயல் முழுமையாக கரையை கடக்கும் நிகழ்வு மேலும் 3 மணி நேரம் நீடிக்கும்” என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விடுமுறை

புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவின் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி, காக்கிநாடா, விஜயநகரம், விசாகப்பட்டினம், எலுரு, அனகப்பள்ளி மற்றும் போலவரம் ஆகிய இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒடிசாவின் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Source link