இந்திய சந்தைக்கு திரும்பிய அன்னிய முதலீட்டாளர்கள்

கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி வந்த அன்னிய முதலீட்டாளர்கள், பிப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் முதலீட்டை துவங்கியுள்ளனர்.

பிப்ரவரி ஒன்று முதல் 6ம் தேதி வரையிலான ஒரே வாரத்தில் 8,129 கோடி ரூபாயை அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து உள்ளனர்.

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த பேச்சில் ஏற்பட்ட முன்னேற்றம், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையை குறைத்து சந்தை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்தது.

நிறுவனங்களின் லாப வளர்ச்சி தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பது மற்றும் உலக வர்த்தக பிரச்னைகள் கட்டுப்பாட்டில் இருப்பது சந்தை ஏற்றத்துக்கு உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, 2025ம் ஆண்டு முழுதும் அன்னிய முதலீட்டாளர்கள் கிட்டதட்ட 1.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறி இருந்தது கவனிக்கதக்கது.

இந்திய சந்தைக்கு திரும்பிய எப்.பி.ஐ., மாதம் தொகை நவம்பர், 2025 ரூ.3,765 கோடி விற்பனை டிசம்பர், 2025 ரூ.22,611 கோடி விற்பனை ஜனவரி, 2026 ரூ.35,962 கோடி விற்பனை பிப்ரவரி 6 வரை ரூ.8,129 கோடி முதலீடு

Source link