சென்னை,
இருளுக்குள் மறைந்திருக்கும் உண்மை என்ன?, 13 என்ற எண்ணுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதே திகிலூட்டும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்தடுத்த படங்களில் கலக்கும் ஜி.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக பல வெற்றிப் பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ள இவர், நடிகராகவும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘பேச்சுலர்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ஜி.வி.பிரகாஷ், தற்போது தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் ‘இம்மார்டல்’ என்ற திகில் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகை கயாடு லோகர் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த மக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மீண்டும் திகில் படத்தில் ஜி.வி.பிரகாஷ்
இந்த படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு திகில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். அதன்படி, மெட்ராஸ் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கே.விவேக் இயக்கத்தில் உருவாகி வரும் ’13’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பவ்யாதி ரிகா நடிக்கிறார். முன்னணி இயக்குனர் கவுதம் மேனன், கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
டிசம்பரில் வெளியாகுமா?
இருளுக்குள் மறைந்திருக்கும் உண்மை என்ன?, 13 என்ற எண்ணுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதே திகிலூட்டும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. உண்மை சம்பவங்களுடன், கற்பனையும், அமானுஷ்யங்களும் கலந்து ரசிகர்களை திகிலில் உறையவைக்கும் வகையில் இப்படம் தயாராகி இருக்கிறது. மனித நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ரிலீசுக்கு முந்தையப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. டிசம்பரில் படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
