உலகின் சிறந்த கால்பந்து வீரராக ஹாரி கேன் தேர்வு

பிரான்ஸ் கால்பந்து இதழியல் சார்பில், உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான 70-வது ‘பாலோன் டி ஓர்’ விருது வழங்கும் விழா லண்டனில் நேற்று முன்தினம் இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் மொத்தம் 29 வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்ற 100 கால்பந்து பத்திரிகையாளர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே. ஸ்பெயின் ‘இளம் புயல்’ லமின் யமால் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

முதல்முறையாக

இறுதியில் ஹாரி கேன் முதல்முறையாக இந்த விருதை தட்டிச் சென்றார். இங்கிலாந்து வீரர் ஒருவர் இந்த விருதை வெல்வது கடந்த 25 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2001-ம் ஆண்டில் இங்கிலாந்தின் மைக்கேல் ஓவன் பெற்றிருந்தார்.

பேயர்ன் முனிச்

33 வயதான ஹாரி கேன் ஜெர்மனியின் பேயர்ன் முனிச் கிளப்புக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் அவர் சர்வதேச மற்றும் கிளப் போட்டிகளை சேர்த்து மொத்தம் 73 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். மேலும் அவரது தலைமையிலான இங்கிலாந்து அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடத்தை பிடித்து சாதித்தது.

மெஸ்சி 5-வது இடம்

விருது பட்டியலில் எம்பாப்பே 2-வது இடத்தையும், யமால் 3-வது இடத்தையும் பெற்றனர். அர்ஜென்டினா முன்னாள் கேப்டன் லயோனல் மெஸ்சி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயின் நட்சத்திரமும். பார்சிலோனா கிளப்புக்காக ஆடுபவருமான அலெக்சியா புடெல்லாஸ் 3-வது முறையாக வசப்படுத்தினார். அவர் 2021, 2022-ம் ஆண்டுகளிலும் இந்த கவுரவத்தை பெற்றுள்ளார்.

Source link