தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு : ரேபிடோ, ஊபர் கட்டணமும் இதேபோல் உயர்த்தப்படுமா? – tamil nadu auto-rickshaw fare hike will rapido and uber apps also be increased accordingly

தமிழ்நாட்டில் ஆட்டோ ரிக்‌ஷா கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து ரேபிடோ , ஊபர்போன்ற செயலிகளின் ஆட்டோ கட்டணங்களும் இதேபோல் உயர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை உள்பட தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கான வாடகை கட்டணத்தை 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசுதிருத்தி வெளியிட்டது .அதில் 1.8 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா 25 ரூபாயும் நிர்ணயம்; இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, ஒன்றரை மடங்கு தொகையை இரவு நேரக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் ஆட்டோ கட்டண உயர்வை தொடர்ந்து ரேபிடோ (Rapido), ஊபர் (Uber) போன்ற செயலிகளின் ஆட்டோ கட்டணங்களும் இதேபோல் உயர்த்தப்படுமா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Source link