வார இறுதி நாட்கள் வந்துவிட்டாலே ஓடிடியில் என்ன புதுப்படம் பார்க்கலாம், வெப்தொடரை காணலாம் என மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஓடிடியில் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
பத்தா: பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி ரிலீஸான பத்தா படம் நாளை நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவிருக்கிறது. உள்ளூரில் பெரிய தாதாவான விஜய் சேதுபதியை பள்ளி பாத்ரூமில் அடைத்துவிடுகிறார் சிறுவன் ஒருவர். சுவாரஸ்யமான இந்த கதையை தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் நாளை ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
சிக்மா: முதல்வர் ஜோசப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் காந்தி ஜெயந்தி அன்று திரைக்கு வந்த சிக்மா படம் அக்டோபர் 30ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வரவிருக்கிறது. ஜேசன் ஆசை ஆசையாக எடுத்த படம் சரியாக போகவில்லை. சிக்மா குறித்து சமூக வலைதளங்களில் வந்த விமர்சனங்கள் அவருக்கு சாதமாக அமையவில்லை. இந்நிலையில் தான் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த சிக்மா படம் ஓடிடிக்கு வந்திருக்கிறது.
இம்மார்டல்: மாரியப்பன் சின்னா இயக்கத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த இம்மார்டல் படம் அக்டோபர் 30ம் தேதி sonyliv ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கயாடு லோஹர். இசை பணியில் பிசியாக இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
அக்கா: பெண்களை கேங்ஸ்டர்களாக காட்டியிருக்கும் அக்கா வெப்தொடர் அக்டோபர் 30ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. அதில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோர் கேங்ஸ்டர்கள். கீர்த்தியும், ராதிகாவும் எதிரிகள். படங்களில் நடிக்கும்போது ஓடிடி தொடரில் நடிக்க வேண்டாம் என பலரும் கீர்த்தி சுரேஷை எச்சரித்திருக்கிறார்கள். ஓடிடி ஒன்றும் குறைச்சல் இல்லை என்று கீர்த்தி நடித்திருக்கும் அந்த வெப்தொடரில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
லவ் ஆல்வேஸ்: 96 படம் புகழ் கௌரி கிஷன், ஜெயசுதா, ஜெயபிரகாஷ், ரம்சான் முகமது, பிக் பாஸ் புகழ் மாயா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் வெப்தொடர் லவ் ஆல்வேஸ். மதுமிதா சுந்தரராமன் இயக்கியிருக்கும் லவ் ஆல்வேஸ் தொடரை அக்டோபர் 30ம் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம். here we go again என்கிற கொரிய வெப்டூனை தழுவி எடுக்கப்பட்ட அந்த தொடர் குறித்து பெரிய அளவில் விளம்பரம் செய்திருக்கிறது ஜியோ ஹாட்ஸ்டார். கௌரி கிஷன் இருப்பதாலேயே லவ் ஆல்வேஸ் மீது இளசுகளின் கவனம் திரும்பியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அவராச்சன் அன்ட் சன்ஸ்: தம்பி இயக்கித்தில் பிஜு மேனன், ஸ்ரீநாத் பஸி, கணபதி, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் நடிப்பில் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸான மலையாள காமெடி படமான அவராச்சன் அன்ட் சன்ஸ் அக்டோபர் 30ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மலையாள படங்களை ஓடிடியில் பார்ப்பது அதிகரித்து வரும் நிலையில் இந்த படம் வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
