மோடியின் கோட்டை.. வாரணாசியில் பாஜக தோல்வி.. மீண்டும் வென்று காட்டிய அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியின் எம்பியாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இந்நிலையில் தான் வாரணாசி எம்எல்சி தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் சட்டசபை மற்றும் சட்ட மேலவை உள்ளன. சட்டபை உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் என அழைப்பது போல் சட்டச மேலவை உறுப்பினர்களை எம்எல்சி என சொல்வார்கள்.

உத்தர பிரதேசத்தில் சட்ட மேலவையில் காலியான 11 இடங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வளியாகி உள்ளது.

இதில் வாரணாசியின் ஆசிரியர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் சிட்டிங் எம்எல்சி லால் பிகாரி யாதவ் களமிறங்கினார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் பிரமோத் மிஸ்ரா போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் சமாஜ்வாதி வேட்பாளர் லால் பிகாரி யாதவ் 4,900 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பிரமோத் மிஸ்ராவை வீழ்த்தினார்.

வாரணாசி லோக்சபா எம்பியாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். கடந்த முறை வாரணாசி ஆசிரியர் தொகுதியில் சமாஜ்வாதியின் லால் பிகாரி யாதவ் வென்ற நிலையில் இந்த முறை எப்படியாவது பாஜக கைப்பற்ற வேண்டும் என்று முனைப்பு காட்டியது. ஆனால் இந்தமுறையும் சமாஜ்வாதி வேட்பாளர்லால் பிகாரி யாதவை வென்றுள்ளார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தற்போது அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. இப்படியான சூழலில் இந்த தேர்தல் வெற்றி என்பது சமாஜ்வாதி கட்சிக்கு உத்வேகம் அளிக்கும்.