சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் திமுக எம்பி தயாநிதி மாறன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதிஹெலன் மாவட்ட, சென்னை ஆணையர் சமீரன் மற்றும் சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த திருவிக நகர் தொகுதி எம்எல்ஏ பல்லவிக்கு மேயர் பிரியா அருகே இடம் ஒதுக்கப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும், மேயர் பிரியாவும் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அங்க இடம் இருக்கு?
கைக்குழந்தையுடன் வந்த எம்.எல்.ஏ பல்லவி கூட்டத்திற்கு சற்று தாமதமாகவே வந்தார். அப்போது அவர் அமரவைக்க இடம் பார்த்தபோது மேயர் பிரியா ‘அங்க சீட் இருக்கு என்பது போல’ சைகை காட்டினார். ஆனால் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தனது இருக்கையை பல்லவிக்கு கொடுத்ததால் அவர் உடனே அங்கு அமர்ந்தார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா அளித்த ரியாக்ஷன்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
எதற்காக இந்தக் கூட்டம்?
சென்னையின் வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாக தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி வருகிறார். அதற்குத் துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர். முதல் கட்டமாக, மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான பணிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்
திமுக எம்பி தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி, திமுக எம்பி வில்சன் மற்றும் திரு வி க நகர் தொகுதி தவெக எம்எல்ஏ பல்லவி, துறைமுகம் எம்.எல்.ஏ சேகர் பாபு உட்பட ஏராளமானோர் மேடையில் அமர்ந்திருந்தனர்
சென்னை வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை
சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்துத் துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான நடைமுறைகள் குறித்தும், மத்திய அரசிடம் இருந்து நிதியை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேயர் பிரியாவுக்கும் எம்எல்ஏ பல்லவிக்கும் இடையே உரசல்
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் எம்எல்ஏ பல்லவி ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாகக் குத்துவிளக்கு ஏற்றச் சென்றபோது, பல்லவியை விளக்கேற்ற விடாமல் தடுத்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையானது. இதற்கு விளக்கம் அளித்த மேயர் பிரியா, நெறிமுறைகளின்படியே (Protocol) தான் நடந்து கொண்டதாகத் தெரிவித்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை மேயர் பிரியா மற்றும் எம்எல்ஏ பல்லவி ஆகியோர் ஒன்றாகப் பொதுவெளியில் தோன்றுவது கவனத்தைப் பெற்று வருகிறது. இருவரும் பங்கேற்கும் நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்திலும் கவனிக்கப்படுகின்றன.
Source link
