Rishabam: நவ.20 முதல் ரிஷப ராசிக்கு ஏறுமுகம்.. தொட்டதெல்லாம் வெற்றி!

நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அதன்படி, நவம்பர் மாதத்தில் ரிஷப ராசியினருக்கு தொழில், வேலை, குடும்பம், பணவரவு எப்படி இருக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தின் நடுப்பகுதி ஒரு 10 நாட்கள் குழப்பமான, சஞ்சலமான சூழ்நிலைகள் இருக்கும். ராசிநாதன் நீச்சமடைந்து மீண்டும் 6 ஆம் இடத்திற்கு ஆட்சி என்ற அமைப்பில் வருகிறார். தொழில் முன்னேற்றம் அற்புதமாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான அமைப்பு உள்ளது.

வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களில் சாதிக்க முடியாமல் இருந்தவர்களுக்கு நீங்கள் செய்யும் முயற்சிகள் சார்ந்த விஷயங்களில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல நிம்மதி ஏற்படும். ராசிநாதன் இரண்டு மாத காலத்திற்கு ஆட்சி என்ற அமைப்பில் இருப்பது, 11 ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் சனி பகவான் வலுத்திருப்பது எல்லா விஷயங்களிலும் நிம்மதியை ஏற்படுத்தும்.

இளைய பருவத்தினருக்கு தன்னுடைய சொந்தக் காலில் நிற்கக்கூடிய யோகம் ஏற்படும். அண்ணா, அப்பா, அம்மாவை நம்பியிருப்பவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கான யோகம் ஏற்படும். சிலருக்கு மாத வருமானம் உறுதியாவதற்கான வாய்ப்பிருப்பதால் பெரிய நன்மைகள் ஏற்படும். 11 ஆம் இடத்தில் சனி இருந்தும், ராசிநாதன் வலுவாக இருந்தால் கூட என் நிலைமை சரியில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் வரக்கூடிய யோகம் ஏற்படும்.

விடாமுயற்சியுடன் செய்து கொண்டிருந்த விஷயங்களில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த மன அழுத்தம், வேலையில் அழுத்தம், குடும்பத்தில் அழுத்தம் என பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும். நடுப்பகுதி 15 நாட்கள் சுமாராகவும், நவம்பர் மாதம் 20 ஆம் தேதியில் இருந்து சகலவிதத்திலும் நல்ல மாற்றங்கள் வந்து, பொருள் சேர்க்கை இருக்கக்கூடிய அமைப்பு உள்ளது.

சொந்த வீடு வாங்குவது, வண்டி வாகனம் வாங்குவது, வீட்டிற்கான பொருள்கள் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் பெறக்கூடிய காலகட்டம்.