தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா; சிறப்பு ரயில்கள் அறிவித்தது தெற்கு ரயில்வே

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வரும் நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது; சொந்த ஊருக்கு செல்ல வசதியாக பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் விபரம் பின்வருமாறு:

சென்னை சென்ட்ரல் மற்றும் போத்தனூர் இடையே நவம்பர் 6ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது; சென்ட்ரலில் இரவு 11.55 மணிக்கு கிளம்பும் ஈந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக போத்தனூர் செல்கிறது. மறுமார்க்கத்தில் நவம்பர் 9ம் தேதி இரவு 11.30 மணிக்கு கோவை போத்தூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.5 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (அக்டோபர் 29) காலை 8 மணிக்கு துவங்குகிறது.

நவம்பர் 6ம் தேதி இரவு 11.55 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதே வழித்தடத்தில் நவம்பர் 9ம் தேதி இரவு 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (அக்டோபர் 29) காலை 8 மணிக்கு துவங்குகிறது.

Source link