சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2026–27 இரண்டாம் அரை ஆண்டிற்கான சொத்துவரியை அக்டோபர் 31-ம் தேதிக்குள் செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, சாலைப் பராமரிப்பு மற்றும் பொது சுகாதாரப் பணிகளுக்குச் சொத்துவரியே பிரதான வருவாய் ஆதாரமாக விளங்குகிறது. நடப்பு 2026–27-ம் நிதியாண்டின் இரண்டாம் அரை ஆண்டிற்கான வரி வசூல் தீவிரமடைந்துள்ள நிலையில், உரிய தேதிக்குள் வரியைச் செலுத்தும் பொறுப்புள்ள குடிமக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31-ம் தேதிக்குள் நிகரச் சொத்துவரியைச் செலுத்தும் உரிமையாளர்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு 5 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.5,000 வரை) ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு வரி செலுத்துவோருக்கு இந்தச் சலுகை கிடைக்காது என்பதால், கட்டணத்தைச் செலுத்த விருப்பமுள்ள பொதுமக்கள் விரைந்து செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Have you paid your property tax for the second half of 2026–27? Pay your property tax before 31 October 2026 and avail the 5% incentive on net property tax, subject to eligibility. Pay today. Enjoy the incentive! #ChennaiCorporation | #NammaChennai | #OurChennaiOurResponsibility | #PropertyTax
— Greater Chennai Corporation (@chennaicorp) October 28, 2026
பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே எளிதாக வரியைச் செலுத்தப் டிஜிட்டல் தளங்களை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. ‘நம்ம சென்னை’ (Namma Chennai) செயலி, மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.chennaicorp.gov.in) மற்றும் 9445061913 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) எண் ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் தங்களது சொத்துவரியை ஆன்லைனில் உடனுக்குடன் செலுத்த முடியும்.
ஆன்லைன் மூலம் செலுத்த வசதியில்லாத பொதுமக்கள், மாநகராட்சியின் மண்டல மற்றும் வார்டு அலுவலகங்கள், அரசு பொது இ-சேவை மையங்கள் (e-Sevai Centres) மற்றும் மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் மூலமாகவும் நேரடியாக வரியைச் செலுத்தலாம். இறுதி நாள் வரை காத்திருக்காமல், இந்தச் சலுகைக் காலத்தைப் பயன்படுத்தி உடனடியாக வரி செலுத்தி ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
