இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்; நெதன்யாகுவிற்கு பின்னடைவு?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், பிரதமர் நெதன்யாகுவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.  

கடந்த 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு, தற்போது தான் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. நேற்று (27-10-26) நடைபெற்ற இந்த தேர்தலில், மிக அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, இந்த தேர்தலில், 77.7% வாக்குகள் பதிவாகியுள்ளன, இது 1999க்கு பிறகு பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு என கூறப்படுகிறது.  

இந்நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மொத்தமுள்ள 120 நாடாளுமன்ற (நெசெட்) தொகுதிகளுக்கான இடங்களில் ஆட்சியமைக்கத் தேவையான 61 இடங்களை எந்த அணி கைப்பற்றும் என்பதில் இழுபறி நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அந்த வகையில், இஸ்ரேலின் ‘கான் 11’ மற்றும் ‘சேனல் 13’ கருத்துக்கணிப்புகளின்படி, நெதன்யாகு அணி மற்றும் ஐசன்கோட் அணி தலா 51 இடங்களை வெல்லும் எனத் தெரியவந்துள்ளது.  மேலும், ‘சேனல் 12’ கருத்துக் கணிப்பின்படி, நெதன்யாகு அணி 50 இடங்களையும், எதிர்க்கட்சி (ஐசன்கோட்) அணி 52 இடங்களையும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.  

இதனிடையே, அரபு கட்சிகள் (ராம் மற்றும் ஜாயிண்ட் லிஸ்ட்) 17 முதல் 18 இடங்களைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆட்சி அமைப்பதில் இவர்களின் பங்கு முக்கியத்துவம் பெறக்கூடும் என்பது குறிப்பிடதக்கது.