உலக இளைஞர் டேபிள் டென்னிஸ்: திவ்யான்ஷி சாம்பியன்

சென்னையை அடுத்த மேலக்கோட்டையூா் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலை வளாகத்தில் நடைபெற்ற உலக இளைஞர் டேபிள் டென்னிஸ் கன்டென்டா் போட்டி 19 வயதுக்குட்பட்ட மகளிா் பிரிவில் திவ்யான்ஷி பவுமிக்கும், ஆண்கள் பிரிவில் பிரியானுஜ் பட்டாச்சாா்யாவும் சாம்பியன் பட்டம் வென்றனா்.

இறுதிப் போட்டியில் திவ்யான்ஷி 11-7, 11-4, 9-11, 11-7 என சயானிகா மாஜியையும், பிரியானுஜ் 7-11, 13-11, 11-8, 11-6 என்ற கணக்கில் அபினாந்த்தையும் வீழ்த்தினர்.

மற்ற பிரிவுகளில் பிரிவில் ஆா்னவ் மிதுன், ஆதித்ய தாஸ், ஸ்ரீஜனி சக்கரவர்த்தி, சாக்‌ஷயா சந்தோஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இன்று முதல் 1-ந்தேதி வரை பீடா் போட்டி நடைபெறுகிறது. இதில் முன்னணி, வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.

Source link