வங்காள மக்களுக்கு மீன் சாப்பிடுவது எப்படி என்று நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். பாஜகவினர் உங்களை மீன் சாப்பிட விடமாட்டார்கள். நீங்கள் இறைச்சி சாப்பிட முடியாது, முட்டை சாப்பிட முடியாது, வங்காள மொழியில் பேச முடியாது. மீறிப் பேசினால், உங்களை ‘வங்கதேசத்தவர்’ என்று முத்திரை குத்துவார்கள்.’ என தெரிவித்தார்.
ஒரு படி மேலே சென்று பேசிய மத்திய அமைச்சர் சுகந்த் மஜும்தார், ’பாஜக ஆட்சிக்கு வந்தால், மீன் உண்ணும் பழக்கமுடைய ஒருவரே முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் கூறினார்.
தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்க வரும் பாஜக தலைவர்களை, அவர்கள் செல்லும் பகுதிகளில் முட்டை மற்றும் மீன்களைக் கொண்டு வரவேற்குமாறு தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
