தவெக ஆட்சி என்பது எளிய மக்களின் ஆட்சி என்று தொடர்ந்து புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் மட்டுமின்றி, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் கொடுத்து அழகு பார்த்து வருகிறார் முதலமைச்சர் விஜய். இளைஞர்கள், எளிய மனிதர்களை அதிகாரமிக்க பதவிகளில், பொறுப்புகளில் பார்க்க முடிகிறது.
TABCEDCOக்கு புதிய தலைவர் நியமனம்
அந்த வரிசையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவராக விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அரசின் கீழ் உள்ள வாரிய தலைவர் பதவிகளில் இதுவும் ஒன்று. விக்னேஷ்வரனை பொறுத்தவரையில் எளிய பின்னணியில் இருந்து அரசியல் களத்தில் கவனம் பெறும் வகையில் மாறியிருக்கிறார். புதிய பொறுப்பு வழங்கபட்டதை அடுத்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
யார் இந்த விக்னேஸ்வரன்?
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். பி.இ பட்டதாரி. சுயமாக தொழில் செய்து வருபவர். திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனுக்கு தூரத்து சொந்தம். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட போது செய்தி தொடர்பாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையின் போது, இவரும் பெயரும் முக்கியத்துவம் பெற்றது. சமூக நீதி அரசியல் சார்ந்து ஆழமான படிப்பினை கொண்டவர். நல்ல பேச்சாளர்.
சமீபத்தில் கூட பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் முக்கியத்துவம் தொடர்பான கூட்டத்தில் தவெக சார்பில் கலந்து கொண்டார். அப்போது இவர் பேசிய விஷயங்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை பெரிதும் ஆச்சரியத்தில் ஈர்த்தது.
தவெகவில் இருக்கும் இளைஞர்கள் தமிழக மண் சார்ந்து, மொழி சார்ந்து, சமூக நீதி சார்ந்து சிந்தித்து சுயமாக பேசக்கூடிய ஆட்கள் பெரிதாக இல்லை என்ற விமர்சனம் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் நிலையில், அதை தூக்கி ஓரங்கட்டி வைக்கும் அளவிற்கு விக்னேஷ்வரனின் பேச்சு அமைந்திருந்தது எனப் பலரும் சுட்டிக் காட்டி பேசியுள்ளனர்.
முதலமைச்சர் விஜய் வழங்கிய வாரியத் தலைவர் பதவிகள்
லயோலா மணி – தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு – தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் கு.பா.கிருஷ்ணன் – தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் வி.சிவா – தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர்
Source link
