ஸ்பெயின் நாட்டின் மத்திய மாகாணமான டோலிடோவில் (Toledo) இன்று (அக்டோபர் – 28) காலையில் இரு அதிவேக ரயில்கள் ஒன்றோடொன்று மோதி நேரிட்ட கொடூர விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்பெயின் நாட்டின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான டி.வி.இ (TVE) வெளியிட்ட தகவலின்படி, ஒரே திசையில் சென்று கொண்டிருந்த இரு அதிவேக ரயில்கள் ஒன்றோடொன்று மோதியுள்ளன. முன்னால் சென்ற ரயிலின் பின்புறத்தில் மற்றொரு ரயில் பலமாக மோதியதில், இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளாகின.
விபத்தில் சிக்கிய பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக மாட்ரிட் நகரை, சியூடட் ரியால் (Ciudad Real) மற்றும் ஆண்டலூசியா (Andalusia) ஆகிய பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), “பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து அவசரகால மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் களத்தில் பணியாற்றி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விபத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளைத் தங்க வைப்பதற்காக விளையாட்டு அரங்கம் ஒன்றை ஆயத்த நிலையில் வைக்குமாறு குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகள் நகர நிர்வாகத்திடம் கோரியிருக்கின்றனர்.
ஸ்பெயின் நாட்டின் அதிவேக ரயில் அமைப்பின் பாதுகாப்பு குறித்து ஏற்கனவே கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த விபத்து மீண்டும் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தெற்கு ஸ்பெயினில் ரயில் ஒன்று தண்டவாளம் தடம் புரண்டு எதிரே வந்த மற்றொரு ரயில் மீது மோதியதில் 45 பேர் உயிரிழந்தனர். 2013-ம் ஆண்டில் 80 பேர் உயிரிழந்த கொடூர விபத்திற்குப் பிறகு, ஸ்பெயின் கண்ட மிகப்பெரிய ரயில் விபத்தாக அது கருதப்பட்ட நிலையில், தற்போது சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு கொடூர விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
