முதல்வர் விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷும் அரசியல் பிரவேசம் காணவுள்ளதாகத் தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தனுஷின் செயல்பாடுகளும் அவரது அடுத்தகட்ட நடவடிக்கைகளும் அமைந்து வருகிறது. நற்பணி கொடி வைரல், பிரம்மாண்ட நிர்வாகிகள் சந்திப்பு, நற்பணி மன்றத்தைத் தொகுதி வாரியாக வலுப்படுத்துதல், மன்றத்தை இயக்கமாக மாற்றியமைத்தல் உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். இதைத்தவிர்த்து டெல்லியில் முக்கிய புள்ளிகளை சந்தித்தல், கட்சி பெயரை பதிவு செய்தல் உள்ளிட்ட விஷயங்களும் நடந்ததாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக அண்மையில் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு பிரம்மாண்டமாக நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 3,000-க்​கும் மேற்​பட்ட பெண்​கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 20 கிராம் அளவிலான வெள்ளி விளக்கு பரிசாக அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அடுத்தக்கட்ட நகர்வாக 234 தொகுதிகளிலும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏசி வசதியுடன் கூடிய டியூஷன் சென்டர் அமைக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 1 டியூஷன் சென்டரில் 3 ஆசிரியர்கள், 1 உதவியாளர் என நியமிக்கவுள்ளதாகவும், அவர்களுக்கு ஊதியமும் தர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பணிகளை வருகின்ற ஜனவரி மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
