இளம்பெண் வீட்டில் 30 சவரன் நகை திருட்டு – நண்பன் கைது

சென்னை,

இளம்பெண் வீட்டில் இருந்து 30 சவரன் நகையை திருடிய நண்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகை திருட்டு

சென்னை வடபழனியை சேர்ந்தவர் நந்தினி. இவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்த பீரோவில் நகையை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பீரோவில் இருந்து 30 சவரன் தங்க நகை காணாமல் சென்றுள்ளது. பின்னர், இது குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நந்தினி வீட்டிற்கு வந்து சென்ற அனைவரையும் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், நந்தினியின் நண்பரான சிவசெந்தூரபாண்டியன் என்பவர் போலீசார் விசாரணைக்கு காவல் நிலையம் வராமல் மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் புதுச்சேரியில் இருந்த சிவசெந்தூரபாண்டியனை பிடித்து விசாரணை நடத்தினர்.

நண்பர் கைது

போலீசார் நடத்திய விசாரணையில், நந்தினி வீட்டிற்கு வந்த சிவசெந்தூரபாண்டியன் குடும்பத்தில் ஒருவர் போல் பழகி வந்துள்ளார். இதனால் அவருக்கு வீட்டு சாவி மற்றும் பீரோ சாவி வைக்கும் இடம் தெரிந்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது நகையை திருடியது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சிவசெந்தூரபாண்டியனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15.5 சவரன் நகைகள், 7.30 லட்ச ரூபாய் ரொக்கம், வங்கிக் கணக்கிலிருந்த 4.25 லட்ச ரூபாய் ஆகியவற்றை மீட்டனர்.

Source link