‘பெர்பாமன்ஸ் இல்லாமத்தான் இந்திய அணிக்கு தேர்வு பண்ணாங்கலா?’ கார்த்திகா குறித்த பயிற்சியாளர் கவிதா பேட்டிக்கு பதிலடி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னையின் கண்ணகி நகர் கார்த்திகா இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்தத் தொடருக்கான லீக் ஆட்டத்தின் போது, கார்த்திகா மைதானத்திலே கண்கலங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் போது, பயிற்சியாளருடன் ஏற்பட்ட வருத்தம் காரணமாக, கார்த்திகா களத்தில் கண் கலங்குவது போன்ற வீடியோ வெளியாகியது.  

இந்த வீடியோக்களை பகிர்ந்து வரும் பலரும் கார்த்திகாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள். கார்த்திகாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட தேசிய கபடி வீரர் சுபா ராஜேஷ் இந்த சம்பவம் பற்றி வேதனை தெரிவித்து இருந்தார். அதில் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் கவிதா தமிழக வீராங்கனைக்கு சரியாக வாய்ப்பு வழங்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்நிலையில், கார்த்திகா விவகாரம் தொடர்பாக இந்திய பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் விளக்கம் அளித்திருந்தார். அதில் ஒரு இந்திய அணி பயிற்சியாளராக தான் சரியாக செயல்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு வீராங்கனையாக இருப்பதால் அவருக்கு ஒரு சில இடத்தில் தான் ஃபேவர் பண்ண முடியும் என்றும் கூறியிருந்தார். 

பதிலடி 

இந்த நிலையில், இந்திய பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் விளக்கத்திற்கு பதிலடி தரும் வகையில் தமிழக கபடி ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக, கடந்த 16 ஆண்டுகளில் 10 வீராங்கனைகளை அவர் உருவாக்கி இருப்பாரா? எனவும், அந்தப் பேட்டியின் மூலம் அவர் கார்த்திகாவை எந்தளவு வெறுக்கிறார், எந்தளவு அவர் மேல் வன்மத்தோடு இருக்கிறார் என்று பட்டவர்த்தனமாக தெரிகிறது என்றும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு கபடி உலகம் என்கிற பேஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

கவிதா அவர்கள் இன்று ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார் அதில் அவர் கார்த்திகாவை எந்தளவு வெருக்கிறார், எந்தளவு அவர் மேல் வன்மத்தோடு இருக்கிறார் என்று பட்டவர்த்தனமாக தெரிகிறது. ஜனவரி மாதம் தேசிய போட்டி நடந்தது, அப்பொழுது இருந்த பெர்மார்மான்ஸ் தொடர்ந்து இருக்காது என்று சொல்கிறார், மூன்று பயிற்சி முகாம் நடந்து இருக்கிறது. முதல் ஆசிய கோப்பை பயிற்சி முகாம் பிட்னஸ் சார்ந்தது, அந்த ரிப்போர்ட் கார்ட் உங்களால் வெளியிட முடியுமா? இரண்டாவது பயிற்சி முகாம் 44 பேருக்கு நடைபெற்றது அதில் சிறப்பாக செயல்படாம, பார்ம் இல்லாமத்தான் அடுத்த 20 பேர் பட்டியலில் கார்த்திகா இடம்பெற்றாரா?  அவர் நீங்கள் சொல்கிற காயம் சரியாகி மூன்றாவது பயிற்சி முகாமிலும் இடம்பெற்றார். அதில் சிறப்பாக செயல்படாம, பார்ம்ல இல்லாமத்தான் காமன்வெல்த் இந்திய அணில தேர்வு பண்ணாங்கலா? 

நீங்க பயிற்சியாளர் இருந்த அந்த காமன்வெல்த் பயிற்சி முகாம்ல ஒரு பெர்மான்ஸ் ரிப்போர்ட் கார்ட் வைத்து இருப்பிங்கள்ல அத வெளியிடுங்க அதுல கார்த்திகா பார்ம்ல இருக்கார இல்லையானு தெரிந்து கொள்வோம். அதே போல ரித்து நேகி, புஷ்பா, ஜோதி, பின்கி, மணிசா, சோனாலி இவுங்க ரிப்போர்ட் கார்டயும் வெளியிடுங்க. லெப்ட் கார்னர் சுமனை விட மணிசா என்ன பெர்பார்மன்ஸ் பண்ணாருன்னு பார்கனும். அப்படியே இந்தியா அணில ஏன் ஒரே ஒரு லெப்ட் கார்னர்  எடுத்தாங்கன்னு தெரிந்து கொள்ள அவா, இரண்டு மாதம் முன்ன காயம் ஆச்சுல அதுல டவுண் ஆயிருக்கலாம்ல என்று நாலாவது மனுசி மாதிரி சொல்ரிங்க? நீங்க அங்க தான இருக்கிங்க பெர்மார்னஸ் ரிப்போர்ட் பார்க்கலயா? நீங்க தான கோச் பெர்மான்ஸ் இல்ல இவர தேர்வு பண்ண வேண்டாம்னு சொல்லி இருக்கலாம்ல. இந்தியா அணியின் தலைமை கோச் 3 மாதம் முன்பு நடந்த சீனியர் பார்க்கலயாம், ஆனா அதுல 94 புள்ளிகள் எடுத்து தமிழ்நாடு அணிய 19 வருடத்திற்கு பிறகு பதக்கம் வாங்க வைத்த பெர்மாமன்ச இந்திய கபடியே பார்த்துச்சு, ஆனா அத மக்கள் கொண்டாடுன அவர மட்டும் கொண்டாடுறாங்கனு ஒரே ஒப்பாரி. 

கார்த்திகா இதுவர அவர் கபடில பார்ம் அவுட்டுனு ஒன்னு ஆனதே இல்லை. 14 தேசிய போட்டி, ஒரு சர்வதேச போட்டி ஆடியிருக்கிறார், அவர் சுத்தமா விளையாடத ஒரு தொடர் உங்களால சுட்டி காட்ட முடியுமா? ஒரு சில போட்டிகள் வேண இருக்கலாம், அதை பார்ம் அவுட்னு சொல்ல முடியாது. எதையும் ஆதராத்தோடு பேசுங்க அத விட்டுவிட்டு இருக்கலாம்ல? நடக்கலாம்லனு ஹைபோதட்டிகளவே பேசிட்டு இருக்கிங்க. உங்க பார்ம் அவுட் கதையெல்லாம் 34, 32, 30 வயது பெர்மான்ஸ் இல்லாம சீனியர்னு பல வருட பழைய பெர்பார்மனஸ் வச்சு கூட்டி போனிங்களே ரித்துநேகி, பின்கி, சோனாலி, புஷ்பா அப்ப உங்க பெர்மான்ஸ் தியரி கோமல இருந்துச்சா? அத பாத்து இருந்த அவுங்க ஆசிய அணில இருந்து  இருப்பாங்களா?  ஆனா நல்ல பார்ம்ல இருக்க வீரங்கனைட்ட உங்க ஊசிபோன பெர்மார்மன்ஸ் கதைய அவுத்து விட்டுகிட்டு இருக்கிங்க. உங்கட்ட யாராவது ஒருத்தர் பேவர் பண்ணுங்கனு கேட்டாங்களா? இங்க கேட்ட அனைவருமே நியாயமா நடந்துகொங்க திறமைக்கு அங்கீகாரம் கொடுங்கனு தான் கேட்டாங்க.

நீங்க என்னமோ நாங்க எல்லாம் உங்கள ஏதோ சட்டத்துக்கு புறம்பா ஏதோ செய்ய சொன்ன மாதிரியும், நான் தமிழ்நாடு கோச் இல்ல இந்தியா கோச்சனு உணர்ச்சிய தூண்டுர வசனம் எல்லா முயற்சி பண்ணிட்டு இருக்கிங்க. மேடம் எங்களுக்கு இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பு (𝗔𝗸𝗳𝗶) பற்றியும் தெரியும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கம் (𝗧𝗻𝗮𝗸𝗮) பற்றியும் விபரமாவே தெரியும். நீங்க தமிழ்நாடு கோச்சா இருந்த பொழுதே கார்த்திகாவ ஓரங்கட்டுனா ஆள்தானா, எங்க இல்லனு உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க. இந்த 16 வருசத்துல நீங்க உதவி செய்து, பயிற்சி கொடுத்து தமிழ்நாட்ல இருந்து எத்தன பேர் இந்திய அணில ஆடி இருக்காங்க? அத விடுங்க 16 வருட சீனியர்ல பதக்கம் வாங்குற அளவாது ஒரு பத்து தேசிய வீரங்கனையாவது உருவாக்கி இருக்கிங்களா? 

அவுங்க சுத்தி, சுத்தி அவுங்க மனசுல ஆளமா பதிஞ்சு போன ஒரு விசயத்த தான் சொல்ராங்க மீடியானு ஒன்னு இல்லான கார்த்திகா இல்லனு. இதுல இருந்தே தெரில இவுங்க ஒரு கபடி பிளேயர் மாதிரியோ, கோச் மாதிரியோ பேசல ரசிகர் எதிர்ப்பு மனநிலைல இருந்து பேசுராங்கனு. அப்புறம் சொல்ராங்க கார்த்திகாவ விட சிறந்த வீரங்கனைகள் இருக்காங்கனு, இல்லனு யார் சொன்னா? பூஜா ஹத்வாலா வெளில தெரியலனு?  உங்களுக்கு தெரியலனு சொல்லுங்க எங்க எல்லோருக்கும் தெரியும். அப்படி இல்லாமயா அவருக்கு அர்ஜுனா விருது கொடுத்தாங்க, 23 தேசிய விருது வாங்கி இருக்காங்க, 4 இந்தியா ஆடி இருக்காங்க, அப்படி சிறந்த வீரங்கனையை விட கார்த்திகா சீனியரில் நன்றாக பெர்மான்ஸ் பண்ணாங்கன்னு நடந்த நிகழ்வ சொல்லி தான ஆகனும்.

பூஜா ஹத்வாலா 51 புள்ளி எடுத்தாங்க, கார்த்திகா 81 புள்ளி எடுத்தாங்க 72 சீனியர்ல. ஈரான் 2018 லயே நம்மள அடிச்சுட்டாங்கன்னு சொல்ரிங்க, அதுக்கு காரணம் உங்கள மாதிரி ஆட்களும், தேர்வு முறையில் இருக்கும் குளருபடிதான் காரணம், நல்ல வீரங்கனைகள இப்படி பெஞ்சுல உட்கார வைக்கிறது, திறமைய ஏற்று கொள்ள மறுத்து அவுங்கள மட்டம் தட்ரது, சிறந்த வீரங்கனைகள தேர்வு செய்ய மறுபதுதான். அணி ஒழுங்கா எடுத்த இந்திய அணிக்கு போட்டி அணியே கிடையாது என்பது தான் என்னுடைய கருத்து.

சீனியர்ல ஒரு வெண்கல பதக்கம் வாங்க 16 வருசம் ஆச்சே ஏன்னு கேட்க்குறாங்க அதுக்கு காரணம் சொல்ராங்க 7 பேரும் சரிசமமா கொண்டாட படலையாம். அப்புறம் ஏன் ஒரு போட்டில ஒரு அணில ஒரு சிறந்த வீரர், வீரங்கனை விருது கொடுக்குறாங்க, ஒரு தொடர்ல ஒருத்தருக்கு 𝗠𝗩𝗣 விருது கொடுக்குறாங்க? ஏன்னா அந்த அணியோட வெற்றிக்கு அனைவர காட்டிலும் அவரோட பெர்மார்னஸ், கான்ரிபூசன் அதிகமா இருக்கு என்ற காரணம் தான்.

சுத்தி, சுத்தி அவுங்க வந்து நிக்கிற இடம் ஒத்த ஆள கொண்டாடுறாங்க, ஒத்த ஆளா கொண்டாடுறாங்க, இவ்வளவு மனசால காயப்பட்டு இருக்கவங்கட்ட இருந்து கார்த்திகாவுக்கு நல்லது நடக்கும்னு எதிர்பார்ப்பது எத்தன தவறு . கார்த்திகா வீடு போயஸ்கார்டன்ல இருக்கு, படிச்சது பத்ம சேஷாத்திரி, சாப்பாடு எல்லாம் 𝗜𝗧𝗖 கிராண்ட் சோழாதான். இவுங்க மட்டும் கஷ்டபட்டு வந்தாங்க, கார்த்திகா நேரடியா இந்திய அணிக்கு வந்துட்டாங்க. இந்த இடத்துக்கு வரும் வழில நீங்க கார்த்திகாவுக்கும், அவுங்க அணிக்கும் கொடுத்த அத்தன டார்சர்களையும், இப்படி உங்கள மாதிரி பேச அனுமதித்த அவுங்களும் சொல்வாங்க.

2006 ல இருந்து 2010 வரை 4 முறை தமிழ்நாட்ல இருந்து இந்திய அணில உங்கள தவிர வேறு சிறந்த வீரங்கனைகளே இல்ல அப்படித்தானா?  அதே மாதிரி தமிழ்நாட்ல இருந்து இந்திய அணிக்கு பயிற்சியாளராக போக உங்கள தவிர வேற ஆளே இல்ல. நீங்க இந்திய அணில ஆடினபோது எத்தன முறை உங்க தனிபட்ட சிறந்த ஆட்டத்தால இந்திய அணி வேற்றி பெற்றது? நீங்க எத்தனை முறை சிறந்த வீரங்கனை விருது வாங்குனிங்க? உங்களுக்கு எப்படி வாழ்நாள்சாதனை விருது கிடைத்தது? இப்படி எல்லோருடைய வாய்ப்பை தட்டி பறித்து வளர்ந்துட்டு தத்துவம்ல பேசுறிங்க.

போற போக்குல ஒன்னு அடிச்சு விட்ரிங்க உங்கனால கார்த்திகா வழர்ந்தாங்களா? உங்களால உங்கள தவிர இங்க யாரும் வளரல அடித்து என்னால் சொல்ல முடியும் உங்களால கார்த்திகா மாதிரி பாதிக்கபட்டவங்க தான் அதிகம். உங்க வளர்ச்சிக்கு காரணமே தமிழ்நாடு கபடி அசோசியேசன் தான், அவர்கள் இல்ல நீங்க இல்ல. அடுத்த இன்டர்வியு கொடுங்க இன்னும் நிறையா பேசுவோம். நீங்கதான வருத்தபட்ரிங்க நான் இருந்த காலத்துல மீடியா இல்லனு, இப்ப உங்கள பற்றி தினமும் பேசலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Source link