சென்னை: தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான ஜோசப் விஜய்யின் அரசியல் வெற்றி, மற்ற தமிழ் நடிகர்களுக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது. தனுஷ் , சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் கவனம் தமிழக அரசியலின் பக்கம் திரும்பி உள்ளது. விஜய் அரசியலுக்கு வந்த புதிதில் 234 தொகுதிகளிலும் காமராஜர் டியூஷன் சென்டர் என்ற பெயரில் டியூசன் சென்டர் ஆரம்பிக்க போவதாக கூறியிருந்தார். அதே பாணியில் நடிகர் தனுஷ் 234 சட்டமன்ற தொகுதியிலும் ஏசி டியூசன் சென்டர் அமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது பற்றி தனுசு ரசிகர் மன்ற வட்டாரங்களில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியிலும் பிளஸ் 2 மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாக ஏசி வசதியுடன் டியூஷன் சென்டர்கள் திறக்க தனுஷ் நற்பணி இயக்கம் திட்டமிட்டுள்ளதாம்.
இது பெயருக்கான டியூசன் சென்டர் ஆக இருக்காது என்றும் கூட்ட நெரிசலுடன் இல்லாமல், மாணவர்கள் மிக நல்ல வசதிகளுடன் அமர்ந்து படிக்கும் வகையில் பிரத்யேக மேசைகள், தனித்தனி நாற்காலி வசதியுடன் இந்த மையங்கள் வடிவமைக்கப்பட உள்ளதாம். இந்த திட்டத்தை விஜய் செய்வதற்கு முன்பே விஜயகாந்த் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி என்ற பெயரில் பல இடங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தை நடத்தினார். அதன் மாற்று வடிவமாகவே இலவச டியூசன் சென்டர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் கட்சி தொடங்கும் போது ஆரம்பிக்கிறார்கள். நடிகர் தனுஷின் ஆரம்பிக்க அதிக வாய்ப்புள்ளதாகவே சொல்கிறார்கள்.
தனுஷ் ஆரம்பிக்கும் இலவச டியூசன் சென்டரில், மாணவர்களுக்கு இலவசமாக மடி மற்றும் புக் பேட் அல்லது டிப் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஒவ்வொரு பயிற்சி மையத்திற்கும் தகுதியான 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் என மொத்தம் 5 பணியாளர்களை நியமித்து அவர்களுக்கான சம்பளத்தை இயக்கத்தின் தலைமைக் கழகம் வழங்க உள்ளதாம்
முதற்கட்டமாக வரும் ஜனவரி மாதம் எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் இந்த இலவச பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது என்கிறார்கள்.
.
பிளஸ் 2 முடித்து அடுத்த ஆண்டு கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு 18 வயது பூர்த்தியடைவதால் அவர்களைக் கவர தனுஷ் இந்த யுக்தியை கையில் எடுத்திருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
இதனிடையே, அரசு பள்ளிகளிலேயே சிறப்பு டியூஷன் வகுப்புகளை தொடங்க குறித்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர் பரக்கத் அலி, விஜய் கட்சி ஆரம்பித்த நேரத்தில் காமராஜர் பிறந்தநாளில் 234 தொகுதிகளிலும் ”காமராஜர் இரவு நேர பாடசாலை ஆரம்பிக்கப்படும்” என்றார். அந்த காமராஜர் பாடசாலைகள் எங்கிருக்கிறது? என தேடித்தான் பார்க்க வேண்டும்.
”அண்ணனை நேரில் பார்த்துட்டேன்”னு அதே துணியை அதே டைலரிடம் தனுஷ் ரசிகைகள் கடந்த வாரம்தான் தைத்தார்கள். இப்போது 234 தொகுதிகளிலும் ஏசி டியூசன் சென்டர் என ஏமாற்ற வருகிறார் தனுஷ். பண மோசடியில் ஏமாந்து பணத்தை இழந்த பிறகு மீண்டும் மீண்டும் அதே மோசடியில் போய் விழுகிறவர்கள், தனுஷ் இந்த நாட்டை காப்பார் என நம்பாமல் இருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
