அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் புது சாதனை.. 2வது காலாண்டில் EBITDAவாக கிடைத்த ரூ.11,958 கோடி

மும்பை: அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் 2026 செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தனது நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நிறுவனம் வரலாற்றிலேயே மிக உயர்ந்த அரையாண்டு EBITDA-வாக ரூ. 11,958 கோடியை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 56 சதவீதம் அதிகமாகும்.

அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமாக அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறது. அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் (Adani Ports & SEZ), அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி பவர், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் என தனித்தனி நிறுவனங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறது.

அடுத்ததாக புதிய துறைகளிலும் முதலீடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய எரிசக்தி திட்டம், விமான நிலைய மேலாண்மை, டேட்டா சென்டர்கள், சாலைகள், காப்பர் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்து வருகிறது. இந்நிலையில் தான் அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் 2026 செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தனது நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த நிறுவனம் வரலாற்றிலேயே மிக உயர்ந்த அரையாண்டு EBITDA-வாக ரூ. 11,958 கோடியை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 56 சதவீதம் அதிகமாகும்.

மேலும் 2026-2027 நிதியாண்டின் (FY27) முதல் பாதியில், அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் முந்தைய ஆண்டை விட 62 சதவீதம்அதிகரித்து ரூ. 71,569 கோடியாக உயர்ந்துள்ளது. EBITDA 56% அதிகரித்து ரூ. 11,958 கோடியை எட்டியுள்ளது.

2026-2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) பதிவு செய்யப்பட்ட, OFAC தொடர்பான ஒருமுறை தீர்வு தொகையான ரூ. 2,644 கோடியை தவிர்த்துப் பார்த்தால் வரிக்கு முந்தைய லாபம் (PBT) 45% அதிகரித்து ரூ. 3,297 கோடியாக உள்ளது.

அதேபோல்நிறுவன உரிமையாளர்களுக்குச் சேர வேண்டிய வரிக்கு பிந்தைய லாபம் (PAT) ரூ. 332 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ. 4,189 கோடியாக இருந்தது. முதல் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்வு தொகை மற்றும் முந்தைய ஒப்பீட்டுக் காலத்திலிருந்த ரூ. 3,583 கோடி மதிப்பிலான ஒருமுறை நிகழ்வு (exceptional item) ஆகியவை இந்த மாற்றத்திற்குக் முக்கிய காரணங்களாகும்.

காப்பர் வணிகப் பிரிவில் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டதே EBITDA மற்றும் PBT உயர்வுக்கு காரணம் என நிறுவனம் அதிகரித்துள்ளது. இப்பிரிவு ரூ. 2,033 கோடி EBITDA-வை பதிவு செய்துள்ளது. மேலும், CARE Ratings நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட்-யின் நீண்டகால கடன் மதிப்பீட்டை (credit rating) ‘AA/Stable’ என உயர்த்தியுள்ளது. இது அந்நிறுவனத்தின் கடன் வரலாற்றிலேயே மிக உயர்ந்த மதிப்பீடாகும்.

ஜூலை-செப்டம்பர் காலாண்டில், வருவாய் 74% அதிகரித்து ரூ. 38,023 கோடியாகவும், EBITDA 62% அதிகரித்து ரூ. 6,316 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 146% அதிகரித்து ரூ. 2,002 கோடியை எட்டியுள்ளது. உரிமையாளர்களுக்குச் சேர வேண்டிய வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 1,492 கோடியாக உள்ளது. இது 2026 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 3,304 கோடியாக இருந்த நிலையில், தற்போது 55% சரிவைக் கண்டுள்ளது.

அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் (Adani New Industries) செப்டம்பர் 2026-ல் 4.3 ஜிகாவாட் திறன் கொண்ட ‘TOPCon’ உற்பத்தி அலகுகளை செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது. இதன்மூலம் தனது சோலார் மாட்யூல் உற்பத்தி திறனை 10 ஜிகாவாட்டாக அதிகரித்தது. மேலும் 6 ஜிகாவாட் திறன் கொண்ட செல்லைன் அலகின் கட்டுமான பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் காலாண்டில், சோலார் மாட்யூல் விற்பனை 35% அதிகரித்து 1,478 மெகாவாட்டாகவும், காற்றாலை மின் உற்பத்தி இயந்திரங்களின் விற்பனை 25% அதிகரித்து 35 செட்களாக உயர்ந்துள்ளன. இருப்பினும், ANIL சுற்றுச்சூழல் அமைப்பின் இரண்டாம் காலாண்டு EBITDA 7% சரிந்து ரூ. 1,094 கோடியாகவும், முதல் அரையாண்டின் EBITDA 13% சரிந்து ரூ. 2,066 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

அதானி கனெக்ஸ் (AdaniConnex) நிறுவனம், தனது நவி மும்பை டேட்டா சென்டருக்காக 240 மெகாவாட் திறன் கொண்ட புதிய ‘ஹைப்பர்ஸ்கேல்’ (hyperscale) ஆர்டரைப் பெற்றுள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் மொத்த ஒப்பந்தத் திறன் 1.2 ஜிகாவாட்-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் செயல்பாட்டுத் திறன் 94.6 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. இதில் நொய்டாவில் 10 மெகாவாட் மற்றும் புனேவில் 19.2 மெகாவாட் திறன் கொண்ட வசதிகள் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் காலாண்டில் காப்பர் விற்பனை அளவு 5.8 மடங்கு அதிகரித்து 80.6 கிலோ டன்களாக உயர்ந்துள்ளது. முதல் அரையாண்டில், இந்த விற்பனை அளவு 5.2 மடங்கு அதிகரித்து 145.3 கிலோ டன்களாக இருந்தது.

விமான நிலையம் சார்ந்த தொழில்களை பொறுத்தமட்டில் இரண்டாம் காலாண்டில் மொத்த வருமானம் 20% அதிகரித்து ரூ. 3,786 கோடியாகவும், EBITDA 55% அதிகரித்து ரூ. 1,641 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இந்தத் துறையில் இரண்டாம் காலாண்டில் வரிக்கு முந்தைய நஷ்டம் (PBT loss) ரூ. 290 கோடியாகப் பதிவாகியுள்ளது. நவி மும்பை விமான நிலைய திட்டத்தை சொத்துகளாகப் பதிவு செய்ததைத் தொடர்ந்து (capitalisation), தேய்மானச் செலவு (depreciation) அதிகரித்ததே இதற்குக் காரணம். இரண்டாம் காலாண்டில் பயணிகள் எண்ணிக்கை 6% சரிந்து 2.12 கோடியாக (21.2 மில்லியன்) இருந்தது; அதே சமயம் சரக்குக் கையாளும் அளவு 11% அதிகரித்து 3.2 லட்சம் டன்களாக உயர்ந்தது.

இரண்டாம் காலாண்டில் சுரங்கசேவைகள் மூலம் கையாளப்பட்ட அளவு 10.7 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது, இது முந்தைய காலாண்டை விட 2% அதிகம். ஒருங்கிணைந்த வள மேலாண்மை (Integrated Resource Management – IRM) பிரிவில், விற்பனை அளவு 34% சரிந்து 7.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. அதே சமயம், கையாளுதல் அளவு 41% அதிகரித்து 6.0 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது.

இதுபற்றி அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கூறுகையில், “நாம் மாற்றங்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம் எனவே, நமது லட்சியங்களின் அளவும் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்க வேண்டும். அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், மிகப்பெரிய மற்றும் சிக்கலான திட்டங்களை செயல்படுத்தி, அவற்றை விரிவான அளவில் நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த திறன் பெற்றுள்ளது.

ஒருங்கிணைந்த எரிசக்தி, விமான நிலையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சூழல் அமைப்புகளில் நிறுவனம் மேற்கொண்டுள்ள முதலீடுகள் தான் இதற்கு சான்றாக உள்ளன. சந்தையில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிலவும் சூழலிலும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் எங்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து, எங்களுடன் இணைந்து செயல்பட முன்வருவது, எங்களது செயல்பாட்டுத் திறனுக்கு கிடைத்துள்ள மிகச்சிறந்த அங்கீகாரமாகும்.

இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான சாதகமான சூழல் மேலும் வலுவடைந்து வருவதால், வரவிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள நாங்கள் முன்னெப்போதையும் விடச் சிறந்த நிலையில் உள்ளோம். இந்தியாவின் எதிர்காலம் குறித்து நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதேபோல், எங்களது சொந்த வளர்ச்சிப் பயணத்தின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.