ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறியதாவது:
தமிழக பழமையான கோயில்களில் இருந்த 39 கல், பஞ்சலோக சிலைகள் அமெரிக்காவின் நியூயார்க், கலிபோர்னியா, சிங்கப்பூர், பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளன. இவற்றின் இந்திய மதிப்பு ரூ.268 கோடியே 86 லட்சம். இவை தவிர 33 சிலைகள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அமெரிக்க கோர்ட்டில் உள்ளன.
இவற்றை மீட்காமல் முந்தைய இரு அரசுகளும் துாங்கின. தற்போதைய அரசில் முதல்வர் விஜய் புதியவர். ஆனால் இதுபற்றி தெரிந்த டி.ஜி.பி., உட்பட அதிகாரிகள் துாங்கிக் கொண்டிருக்கின்றனர். சிலை கடத்திய சுபாஷ் சந்திரகபூரை கைது செய்ய 6 வாரன்டுகள் அனுப்பியும் அவரை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. சிலையை மீட்க, முதல்வர் விஜய், பிரதமரை சந்திக்க வேண்டும்.
அவருடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யை அழைத்துச் செல்ல வேண்டும். சிலைகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து காட்சிப் பொருளாக வைக்காமல், எந்தெந்த கோயில்களில் எடுக்கப்பட்டதோ அங்கு மீண்டும் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
