ரஞ்சிக் கோப்பை: ரெயில்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தமிழ்நாடு

Summary

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ரஞ்சிக் கோப்பை போட்டியில் ரெயில்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வீழ்த்தியது.

தமிழ்நாடு- ரெயில்வே அணிகள் மோதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பவுலிங் தேர்வு செய்தது.

ரெயில்வே 184 ரன்களுக்கு ஆல் அவுட்

அதன்படி, முதலில் பேட் செய்த ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுபையர் அலி அதிகபட்சமாக 75 ரன் எடுத்தார்.

தமிழ்நாடு சார்பில் சோனு யாதவ், சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டும், ஹேம்சூதேசன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தமிழ்நாடு 165 ரன்னுக்கு ஆல் அவுட்

தொடர்ந்து ஆடிய தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 165 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாபா இந்திரஜித் அரை சதம் கடந்து 59 ரன் எடுத்தார்.

ரெயில்வே அணி சார்பில் ராஜ் சவுத்ரி 5 விக்கெட்டும், தவுபிக் மொண்டல் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

19 ரன் முன்னிலை பெற்ற ரெயில்வே அணி இரண்டாம் நாள் முடிவில் 2-வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்திருந்தது.

சாஹப் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார்.

இந்நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 126 ரன் முன்னிலை, கைவசம் ஒரு விக்கெட் என்ற நிலையில் ரெயில்வே அணி தொடர்ந்து ஆடியது. மேலும் ஒரு ரன் எடுத்த நிலையில் ரெயில்வே அணியின் கடைசி விக்கெட் விழுந்தது.

இறுதியில், ரெயில்வே அணி 2வது இன்னிங்சில் 52.3 ஓவரில் 108 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழக அணி வெற்றிபெற 128 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தமிழ்நாடு சார்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டும், ஹேம்சூதேசன் 3 விக்கெட்டும், அஜித் ராம் 2 விக்கெட்டும், குர்பஜனீத் சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

128 ரன் இலக்கு

இதையடுத்து, 128 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தமிழக அணி 2-வது இன்னிங்சை ஆடியது. ஆதிஷ், ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

4-வது விக்கெட் ஜோடி

தமிழக அணி 39 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. ஜெகதீசன் 12 ரன்னிலும், சோனு யாதவ் 2 ரன்னிலும், ஆதிஷ் 21 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

4-வது விக்கெட்டுக்கு பாபா இந்திரஜித்-ஆந்த்ரே சித்தார்த் ஜோடி பொறுப்பு டன் ஆடியது. இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்த நிலையில் இந்திரஜித் 23 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் ஒரு ரன்னில்ல் ஆட்டமிழந்தார்.

பொறுப்புடன் ஆடிய சித்தார்த் அரை சதம் கடந்தார்.

இறுதியில், தமிழ்நாடு அணி 59.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 130 ரன் எடுத்து வென்றது. சித்தார்த் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ரெயில்வே அணி சார்பில் தவுபிக் மொண்டல் 4 விக்கெட் டும், ராஜ் சவுத்ரி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது சாய் கிஷோருக்கு வழங்கப்பட்டது.

ஏற்கனவே தமிழ்நாடு அணி முதல் போட்டியில் ராஜஸ்தானுடன் ‘டிரா’ செய்தது. சேப்பாக்கத்தில் நடந்த 2-வது போட்டியில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 66 ரன் வித்தியாசத்தில் உத்தரகாண்டை வீழ்த்தி இருந்தது.

தமிழக அணி 4-வது ஆட்டத்தில் சண்டிகரை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 2-ம் தேதி சண்டிகரில் தொடங்குகிறது.

Source link