தீபாவளி பண்டிகையை கொண்டா சொந்த ஊருக்கு செல்லும், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை அறிவித்து வரும் தெற்கு ரயில்வே தற்போது சென்னையில் இருந்து கோவை செல்லும் வழித்தடத்திற்கான சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.
சொந்த ஊரில் இருந்து வேலைக்காகவும், படிக்கவும் சென்னை வந்திருக்கும் பலர் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இப்படி சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள், ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மேலும், பண்டிகை காலங்களில் பயணிகள், கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்வதை தவிர்க்கும் வகையில் பயணத்திற்கு முன்னதாக முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் வரும் நவம்பர் 8-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக தாம்பரம் முதல் நாகர்கோவில் வரையிலான ரயில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ரயிலுக்கான முன்பதிவு அக்டோபர் 29-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் – கோவை போத்தனூர் (நவம்பர் 6)
தீபாவளிப் பண்டிகை கால கூடுதல் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக, சென்னை – போத்தனூர் இடையே இரண்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 29 தொடங்கும் என்று ‘மாலை மலர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில் (எண். 06023) நவம்பர் 6, வெள்ளிக்கிழமை அன்று இரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூரை அடையும். இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்து போத்தனூர் சென்றடையும். அதேபோல், மறுமார்க்கமாக (எண். 06024) நவம்பர் 9 அன்று இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.
🪔Diwali Special Trains! 🚆 To clear the extra rush of passengers during Diwali, Express Special trains will operate between Dr MGR Chennai Central and Podanur on 6 and 9 November 2026. 📌Advance bookings open at 08.00 hrs on 29.10.2026 (Tomorrow). #SouthernRailway #IndianRailways #Diwali #Diwali2026 #FestiveVibes
— Southern Railway (@GMSRailway) October 28, 2026
தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) வர உள்ள நிலையில், திங்கள் கிழமையும் (நவம்பர் 9) சேர்த்து தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளதால், மறுமார்க்கமாக சென்னை வரும் சிறப்பு ரயில்கள் அனைத்தும் திங்கள் கிழமை இரவே புறப்படுகிறது. மேலும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 29-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
