தமிழ்நாட்டில் 19 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தழிக அரசு உத்தரவுட்டுள்ளது. அந்த உத்தரவுபடி, தென்காசி ஆட்சியராக மோனிகா ராணா ஐஏஎஸ்., திருப்பூர் ஆட்சியராக முத்துக்குமரன் ஐஏஎஸ்., கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசன்ன ராமசாமி ஐஏஎஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
3 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்
தென்காசி மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக மோனிகா ராணா நியமித்து அரசு உத்திவிட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக இருந்த மோனிகா ராணா, தற்போது தென்காசி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். இவர் ரஞ்சித் சிங், IAS இடத்திற்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக முத்துக்குமரன் நியமித்து அரசு உத்திவிட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டராக இருந்த C.முத்துக்குமரன், தற்போது திருப்பூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். இவர் மனிஷ் S. நர்னாவரே இடத்திற்கு பதிலாக செல்கிறார்.
கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக S.பிரசன்னா ராமசாமி நியமித்து அரசு உத்திவிட்டுள்ளது. புதிதாக IAS பணிக்கு இணைந்த S.பிரசன்னா ராமசாமி, IAS, (ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழகங்களுக்கான துணை செயலாளராக இருந்தவர்) கரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
