திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, நவ., 15ல், தொடங்கி, நவ., 24ல், மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.
விழாவிற்கு, 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் மட்ட குழு அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இன்று (அக்.,28), அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அறநிலையத்துறை ஆணையர் வினய் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதில், பக்தர்கள் அனுமதிக்கப்படும் வழி, வெளியே செல்லும் வழி, தங்க கொடிமரம் எதிரிலுள்ள வளாகம் உள்ளிட்ட பகுதிகள், மலை மீது மஹா தீபம் ஏற்ற எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது, அவர்களுக்கு பாதுகாப்பு வசதி செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
