நமது நிருபர்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் ஒருங்கிணைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மூத்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ரயில் நிலையங்களை பல்முனை போக்குவரத்து மையங்களாக விரைவாக மேம்படுத்த வேண்டும். மருந்து உற்பத்தியில் சுயசார்பை ஊக்குவிக்க வேண்டும்.
கைவினைஞர்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களை வலுப்படுத்த ஆதரவு அளிக்க வேண்டும். எங்களது நோக்கம் தெளிவானது. திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். திட்டங்கள் மக்களுக்கு நீண்ட கால நன்மைகளையும், பலன்களையும் வழங்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
