பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்; ராஜ்நாத்சிங்

செபு: 13வது ஆசியன் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு பிலிப்பைன்ஸின் செபு நகரில் நடந்தது. இதில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

அவர் பேசியதாவது; இன்று நாம் பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இந்தியாவின் இந்தோ-பசுபிக் தொலைநோக்குக் கொள்கைக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கியமானது. அதிகரித்து வரும் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், நாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும் இணைந்து செயல்படுவது அவசியமாகும். இவ்வாறு கூறினார்.

ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷின்ஜிரோ கோய்ஷூமி, ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லேஷூடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‘ஜெய்’ (JAI) எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மக்டன் எக்ஸ்போவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

Source link