கூட்டணியில் இழுபறி இல்லை பேச்சு நடக்கிறது: காங்கிரஸ்

சென்னை: ”பிற கட்சிகள் பிரச்னையில், காங்கிரஸ் மூக்கை நுழைக்காது,” என அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு, எந்த இழுபறியும் கிடையாது, கூட்டணி குறித்த பேச்சு நடந்து வருகிறது.

எங்கள் கூட்டணி பற்றி அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கவலைப்பட தேவையில்லை. பா.ஜ., ‘ஆக்டோபஸ்’ மாதிரி எல்லா கூட்டணி கட்சிகளையும் விழுங்கி இருக்கிறது. எனவே, அ.தி.மு.க.,வை பத்திரமாக வைத்துக்கொள்ள சொல்லுங்கள்.

அ.தி.மு.க.,வை பா.ஜ., முக்கால்வாசி விழுங்கிவிட்டது. பழனிசாமி, கட்சியை விட்டு விடாமல் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது.

அ.தி.மு.க., கூட்டணியில், அனைத்துக் கட்சியினரும் ஒரே மேடையில் ஏறி விட்டனர் என்று பெருமை பேசி விடுகின்றனர். கார்ல் மாக்ஸ் சிலை திறப்பு விழாவின் போது, எங்கள் கூட்டணியை சேர்ந்த அனைத்துத் தலைவர்களும் ஒன்றாக கைகோர்த்துத்தான் இருந்தோம்.

வரும் 18ல், எல்லாரும் சேர்ந்து, மத்திய பா.ஜ., ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளோம். நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

பா.ம.க.,வை கூட்டணியில் சேர்ப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். பிற கட்சிகள் பிரச்னைகளில், காங்கிரஸ் மூக்கை நுழைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link