ஜெயிலர் 2: அஜித் குமார், கமல், விஜய் செய்யாத சாதனையை 76 வயதில் செய்த ரஜினிகாந்த் – rajinikanth breaks his own record with jailer 2 movie

தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் செய்யாத சாதனையை செய்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடித்த ஜெயிலர் 2 உலக அளவில் ரூ. 755 கோடி வசூல் செய்திருப்பதால் அந்த சாதனை சாத்தியமாகியிருக்கிறது.

ஜெயிலர் 2 படம் மூலம் ரூ. 750 கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டார் ரஜினிகாந்த். ஒரு தமிழ் படம் 750 கோடி ரூபாய் வசூல் செய்திருப்து இதுவே முதல் முறை ஆகும்.

ஜெயிலர் 2 வசூல்

​ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 15ம் தேதி வெளியான ஜெயிலர் 2 படம் 14 நாட்களில் இந்தியா மற்றும் உலக அளவில் எத்தனை கோடி வசூலை குவித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். 14வது நாளான நேற்று இந்தியாவில் ரூ. 6.55 கோடி வசூலித்தது டைகர் முத்துவேல் பாண்டியன் படம். இதன் மூலம் இரண்டு வாரங்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 423 கோடி வசூல் செய்துவிட்டது. மேலும் உலக அளவில் நேற்றைய வசூல் ரூ. 2 கோடியே 50 லட்சமாக இருந்தது. இதையடுத்து 14 நாட்களில் உலக அளவில் ஜெயிலர் 2 படத்திற்கு ரூ. 755. 50 கோடி கிடைத்திருக்கிறது என சாக்னிக் தகவல் வெளியிட்டிருக்கிறது.

ரஜினி சாதனை

நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் 2 இந்த வாரம் மட்டும் ரூ. 105 கோடியே 80 லட்சம் வசூலித்திருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் அல்ல இதுவரை திரைக்கு வந்த தமிழ் படங்களில் உலக அளவில் ரூ. 755 கோடி வசூலித்த முதல் படம் ஜெயிலர் 2 ஆகும். இதன் மூலம் 76 வயது ரஜினிகாந்த் புது சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அஜித் குமார், கமல் ஹாசன், சினிமாவில் இருந்து கிளம்பிய ஜோசப் விஜய் என யாருடைய படமும் ரூ. 750 கோடியை தாண்டியது கிடையாது. அப்படி இருக்கும் சினிமாவில் 51 ஆண்டுகளாக இருக்கும் ரஜினிகாந்த் இந்த வயதில் அந்த சாதனையை செய்திருக்கிறார். சாதனை செய்ய வயது ஒரு தடை அல்ல என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

ரூ. 1000 கோடி எதிர்பார்ப்பு

ரூ. 755 கோடியை தாண்டிவிட்டதால் 30 நாட்களில் ரூ. 1000 கோடியை தொட்டுவிடுமா ஜெயிலர் 2 என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ரஜினிகாந்த் படம் தற்போது படைத்திருக்கும் சாதனையை முறியடிக்கவே சில ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் எந்த ஒரு நடிகரும் படைத்திடாத சாதனையை ரஜினிகாந்த் படைத்தது இது முதல் முறை இல்லை. முன்னதாக அவரின் 2.0 படம் ரூ. 691 கோடி வசூல் செய்தது தான் ஒரு தமிழ் படம் உலக அளவில் அதிகம் வசூலித்த தொகையாக இருந்தது. அந்த வசூல் சாதனையை ஜெயிலர் 2 அதாவது ரஜினியின் இன்னொரு படம் தான் முறியடித்திருக்கிறது.​

ஜெயிலர் 3

ஜெயிலர் 2 படத்தின் வசூல் சாதனையை ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் 3 படம் முறியடிக்கலாம். ஜெயிலர் படத்தின் மூன்றாவது பாகம் வரும் என இரண்டாம் பாகத்திலேயே தெரிவித்துவிட்டார்கள். அதனால் ரஜினியை வைத்து நான்காவது முறை படம் எடுக்கும் வாய்ப்பு நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் 2 வெற்றிக்காக ரஜினிக்கு மட்டும் அல்ல மூர்த்தி அண்ணனுக்கும் ஒரு கார் பரிசாக கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தலைவர் படங்கள்
ரூ. 600 கோடி படங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மூன்று படங்கள் ரூ. 600 கோடி வசூல் செய்திருக்கின்றன. ஷங்கர் இயக்கிய 2.0 படம் ரூ. 691 கோடி வசூலித்ததன் மூலம் ரூ. 600 கோடி கிளப்பில் சேர்ந்த முதல் ரஜினிகாந்த் படம் என்கிற பெருமையை அது பெற்றது. அதன் பிறகு ஜெயிலர் படம் ரூ. 600 கோடி வசூல் செய்தது. தற்போது ஜெயிலர் 2 ரூ. 600 கோடி அல்ல மாறாக ரூ. 755 கோடி வசூலித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில் நெல்சனுக்கு ஏற்ற ராசியான ஹீரோ ரஜினிகாந்த் தான். அதே போன்று ரஜினிக்கு ரொம்ப ராசியான இயக்குநர் நெல்சன் தான் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link