இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு போர் பயிற்சி அளிக்க யுஏஇ அதிபர் முடிவு

-நமது சிறப்பு நிருபர்-

நடுவானில் பயணியர் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மிட் மச்சார் மற்றும், ‘ப்ளை துபாய்’ விமான நிறுவன சிப்பந்திகளின் வீரதீரத்தை பாராட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் விருது வழங்கி கவுரவித்தார். அதிபர் நஹ்யானுக்கும் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கும் இடையேயான உரையாடல் இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தை பெற்றது.

அந்த வீடியோவில் ‘நீங்கள் எப்போது குணமடைவீர்கள்?’ என்று அதிபர் மச்சாரிடம் கேட்கிறார். அதற்கு இந்திய விமானி மச்சார், இரண்டு மாதங்கள் ஆகும் என்று பதிலளிக்கிறார். ‘எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. நீங்கள் குணமடைந்ததும், எப்படி சண்டையிடுவது என்று நான் உங்களுக்கு போர் பயிற்சி அளிக்க நான் விரும்புகிறேன்,’ என்று யுஏஇ அதிபர் அவரிடம் கூறுகிறார்.

“இதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்,” என மச்சார் பதிலளித்தார். வைரலான மற்றொரு வீடியோவில், அவர் மச்சாரைக் கட்டிப்பிடித்து, அவரது தலையில் உள்ள தையல்களை யுஏஇ அதிபர் பார்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பல்வேறு தரப்பினர் பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார்.

Source link