”பேராபத்தைத் தடுத்து நிறுத்திய கனமழை”; நடு ரோட்டில் மண்டியிட்டு நன்றி தெரிவித்த வீரர்கள்

கடந்த 4  மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யாத காரணத்தினால் கடுமையான வறட்சி நிலை நிலவிவந்தது. இந்த நிலையில், சமீபத்தில் பெய்த கனமழை பெரும் பாதிப்பைத் தடுத்துள்ளதால் வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.  

இந்தோனேசியாவின், தெற்கு கலிமந்தான் மாகாணம் பன்ஜார் பகுதியில், கடந்த நான்கு மாதங்களாக மழை பெய்யாததால் அப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுப் பல நாட்களாகப் பற்றி எரிந்துகொண்டிருந்தது. தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க படைவீரர்கள் போராடி வந்தனர். 

இந்நிலையில், அங்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கனமழை பெய்ததை அடுத்து இந்த காட்டுத்தீ முழுமையாகக் கட்டுக்குள் வந்தது. இதனால், பேராபத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்து நிறுத்தியதற்காகப் படை வீரர்கள் சாலையில் மண்டியிட்டு மழைக்கு (இறைவனுக்கு) நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

தொடர்ந்து பல நாட்களாக எரிந்துகொண்டிருந்த காட்டுத் தீயை அணைக்க முடியாமல் பாதுகாப்பு படைவீரர்கள் திணறி வந்தனர். மேலும், இந்த காட்டுத் தீயினால் உருவான கரும் புகை மூட்டம் மலேசியா மற்றும் சிஙப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த இந்த கனமழையால் காட்டுத் தீ அணைந்ததுடன், மக்களுக்கு நீராதாரத்திற்கான வழி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.