சாக்கடையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை உடல்

Summary

போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பச்சிளம் குழந்தை உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நெல்லையை அடுத்த தச்சநல்லூர் வாலாஜாபேட்டை நடுத்தெரு பகுதியில் இன்று காலை சாலையோர சாக்கடை வாறுகாலில் பிறந்து தொப்புள்கொடி கூட அறுபடாத நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை உடல் கிடந்தது.

போலீசார் விசாரணை

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பச்சிளம் குழந்தை உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதல் விவகாரம்?

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், குழந்தை பிறந்த உடனேயே அதனை வாறுகாலில் வீசி உள்ளனர். சாக்கடை நீரிலேயே கிடந்து குழந்தையின் உடல் ஊதிப் போய்விட்டது. சாக்கடையில் வீசப்பட்டு 2 நாட்கள் வரை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். அந்த பகுதி மக்களிடம் ஏற்கனவே விசாரித்தோம். அவர்கள் நாங்கள் நேற்று இதனை பார்த்தோம். ஆனால் நாங்கள் பொம்மை என்று நினைத்து கொண்டோம் என்று கூறுகின்றனர். விசாரணை முடிவில் இந்த குழந்தை கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்ததால் கொலை செய்யப்பட்டு வாறுகாலில் வீசப்பட்டதா? வேறு எங்கேயும் இருந்து கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதா? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Source link