TN 2026 – விமர்சனம்(2.5 / 5)
வட இந்தியாவிலிருந்து தமிழகம் வரும் நட்ராஜ், குல்கந்த் குமார் என்ற நடிகராக தனது பயணத்தை தொடங்குகிறார்.
ஆரம்பத்தில் எந்த ஆதரவும் இல்லாமல் தடுமாறும் அவருக்கு, ஜமீன்தார் தம்பி ராமையா உதவியாக நிற்கிறார். அவரது ஆதரவால் சினிமாவில் முன்னேறும் நட்ராஜ், பின்னர் முன்னணி நடிகராக உயர்கிறார்.
நடிகராக உச்சத்தை அடைந்த பிறகு, தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றும் அவர், அரசியலுக்கு வருகிறார் என்ற சூழ்நிலை உருவாகிறது. இதனால் அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்க, நட்ராஜ் தனது சொந்த கட்சியை தொடங்கி 2026-ல் முதலமைச்சராக வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.
இறுதியில் நட்ராஜ் முதலமைச்சராக மாறினாரா? திரைப்பயணம் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
குல்கந்த் குமார் கதாபாத்திரத்தில் நட்ராஜ் தனது நடிப்பால் படத்தை தாங்கி நிற்கிறார். ஒரு சாதாரண இளைஞனாக தொடங்கி, பெரிய நடிகராகவும், பின்னர் அரசியல் தலைவராகவும் மாறும் மாற்றங்களை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். சில முக்கிய காட்சிகளில் அவரது நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.
தம்பி ராமையா, வழிகாட்டியாகவும், ஆதரவாளராகவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். அவரின் காட்சிகள் சில இடங்களில் உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்கான பங்கை அளவாக செய்துள்ளனர்.
படத்தின் முதல் பாதி, ஒரு நடிகரின் வளர்ச்சியும், அவர் அரசியலுக்கு வருகிற சூழலும் விறுவிறுப்பாக நகர்கிறது. சமகால அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை நினைவூட்டும் காட்சிகள் இருந்தாலும், திரைக்கதை இன்னும் சீராக இருந்திருக்கலாம்.
இயக்கம்
இயக்குனர் உமாபதி ராமையா, ஒரு நடிகரின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தை தைரியமாக சொல்ல முயற்சி செய்துள்ளார். சில வசனங்கள் தற்போதைய சூழ்நிலைகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. முதல் பாதி ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருக்கிறது.
ஒளிப்பதிவு
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு அந்தந்த காலத்திற்கு ஏற்ப சிறப்பாக அமைந்து இருக்கிறது.
இசை
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான அளவில் உதவுகிறது.
