சென்னை: திமுக ஆட்சியில் அரசு அனுமதி அளிப்பதற்காக, தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற வழக்கில், பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் மகேஷ், அக்., 26ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரிவுபடுத்தி வருகின்றனர்.
இன்று சிறையில் உள்ள மகேஷை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி 2வது முறையாக நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். அவருடன் திமுக எம்எல்ஏ சேகர்பாபு உள்ளிட்டோரும் உடன் சென்றனர். மகேஷூக்கு நவ.,2 வரை ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.
ஏற்கனவே, அக்.,27ம் தேதி புழல் சிறைக்கு சென்று மகேஷை உதயநிதி நேரில் சந்தித்து பேசியிருந்தார்.
