ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக இந்தியத் தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் மிகவும் மோசமான ரயில் விபத்து சம்பவம் அரங்கேறியுள்ளது. மாட்ரிட் மற்றும் செவில்லே ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடையில் நீண்டகாலமாக ரயில் சேவை தொடர்ந்து வருகிறது.
இந்த இரு நகரங்களுக்கு இடையில், ஒரே தண்டவாளத்தில் அதிவிரைவு ரயில்கள் நேருக்கு நேற்று (28-10-26) நேர் மோதிக்கொண்டன. டோலிடா மாகாணத்தில் உள்ள உர்டா பகுதியில் இந்த கோரவிபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மிகப்பெரிய விபத்தில் 68 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பாக அவசர உதவி எண்களை ஸ்பெயினுக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி, விபத்துக்குள்ளான ரயில்களில் பயணித்த இந்தியர்களின் விவரங்கள் அறிய, தேவையான உதவிகளைப் பெற, விபத்து தொடர்பான தகவல்களுக்கு +34 650 339 008 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ரென்ஃபே ரயில்வே உதவி எண் 900 10 10 20 மற்றும் இரியோ ரயில்வே உதவி எண் 900 001 403 ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
