‘பாக்யராஜ் வீடு கடன்ல இருக்கு; பூர்ணிமா எப்படி சமாளிக்கப் போறாங்களோ?’: சினிமா பிரபலம் கூறிய ஷாக் நியூஸ்

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர்,பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட பாக்யராஜ், சமீபத்தில் மரணமடைந்த நிலையில், அவரது வீடு இன்னும் கடனில் இருப்பதாகவும், அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இதை எப்படி சமாளிக்க போகிறார் என்று தெரியவில்லை என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார். 

இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ், இயக்கிய பல படங்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளர், உதவி இயக்குனராக இருந்த பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமாகி ஒரு காட்சியில் நடித்திருந்தவர் பாக்யராஜ். 1977-ம் ஆண்டு வெளியான இந்த படம் தான் ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகத்திற்கு  அழைத்து சென்ற திரைப்படமாக கருதப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து புதிய வார்ப்புகள் (1979) படத்தில் முதலில் நாயகனாக அறிமுகமான பாக்யராஜ் சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  தொடர்ந்து ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூரல் நின்னு போச்சு, பொய் சாட்சி, டார்லிங், டார்லிங், டார்லிங், சொக்கத்தங்கம், என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக பெண் ரசிகைகளை கவரும் வகையில் இவரின் திரைக்கதை அமைந்திருக்கும். அதேபோல் ஒரு கை ஓசை திரைப்படத்தில் சாதிய பிரிவினைகள் குறித்து பேசியிருப்பார்.  

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி பாக்யராஜ் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது குருநாதர் பாரதிராஜா இறந்த 17 நாட்களில் (ஜூன் 10) நடந்த பாக்யராஜ் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவருக்கும் தமிழக அரசின் சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. பாக்யராஜ் இறந்திருந்தாலும் அவருடனான நினைவுகள் குறித்து பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் தற்போது 94 வயதான நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கலைஞானம் பாக்யராஜ் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் நான் ராஜரிஷி படம் எடுத்து தோல்வியை சந்தித்தேன். அப்போது எனக்கு ரூ25 லட்சம் கடன் ஆகிவிட்டது. இதை கேள்விப்பட்ட பாக்யராஜ் என்னை அழைத்து ரூ10 லட்சம் கொடுத்து அண்ணே இனிமேல் சொந்த படம் எடுக்காதீங்க, நான் எடுக்கும் படங்களில் உங்களை சேர்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். 

அவர் முந்தானை முடிச்சு திரைப்படம் மட்டுமே பெரிய நிறுவனத்திற்கான (ஏ.வி.எம்.) செய்தார். மற்ற அனைத்து படங்களையும் தனது நண்பர்களுக்காக இயக்கி, சிறிய அளவில் லாபம் பார்த்தவர். அவர் ஆசையாக கட்டிய வீடு இன்னும் வங்கியில் கடனில் இருக்கிறது. இதை பூர்ணிமா பாக்யராஜ் எப்படி சமாளிக்கப்போகிறார் என்று தெரியவில்லை. கடவுள் அவருக்கு தெம்பை கொடுக்க வேண்டும் என்று கலைஞானம் கூறியுள்ளார். 

Source link