அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: சீமான்

திருநெல்வேலி: சட்டசபை தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றி பெற்ற அதிமுகவின் இசக்கி சுப்பையா , எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இந்த தொகுதி காலியாக உள்ளது. இசக்கி சுப்பையா தவிர்த்து மேலும் 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் ஐந்து தொகுதிகள் காலியாக உள்ளது. அதிமுகவினர் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு உள்ளது.

இந்த வழக்கு முடிந்த உடன் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் கூறியது. அம்பாசமுத்திரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவார் என கடந்த சில மாதங்களாக செய்தி வெளியாகி வந்தது.

இந்நிலையில், திருநெல்வேலியில் நிருபர்களை சந்தித்த சீமான் கூறுகையில், ” அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். என்னை பார்த்து தவெகவினர் ஏன் பயப்படுகிறார்கள். திரைக்கவர்ச்சி மங்கும். உறவுகள் வேறு. அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. நான் எப்போதுமே அனைத்து தேர்தல்களிலும் பொது வேட்பாளர் தான்” என்றார்.

கடந்த சட்டசபை தேர்தலில், காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Source link