கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரி@ழப்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி  உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்த வேட்டையன்கிணற்றை சேர்ந்தவர் சுப்பாயாள் (64). கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக, சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவர் மீது அடிக்கடி அமருவது வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில்,நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சுப்பாயாள், கிணற்றின் சுவர் மீது அமர்ந்துள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் தேடி சென்றனர். அப்போது, கிணற்றின் அருகே செருப்பு மட்டும் கிடந்துள்ளது. சுப்பாயாளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கிணற்றை எட்டிப்பார்த்த போது, 100 அடி ஆழத்தில் உள்ள கிணற்றில் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்து வந்த திங்களூர் போலீசார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சுப்பாயாள் கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்தது.

Source link