போ@தைப்பொருள் விழிப்புணர்வு பேரணி- முன்னெடுத்த தேசிய மாணவர் படை

கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி, கல்லூரி தேசிய மாணவர் படை வீரர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மதுவிலக்கு மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 15-வது தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படை ஈரோடு சார்பில் ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாம் கடந்த 22 முதல் தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமின் முக்கிய நிகழ்வாக பொதுமக்களிடையே போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மதுவிலக்கு மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியை, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வேணுகோபால் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்