டீ ஆற்றி வாக்கு சேகரித்த கிருத்திகா தங்கபாண்டி

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.

அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி பல்வேறு இடங்களிலும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் அங்குள்ள டீக்கடை ஒன்றில் ஆற்றியும், வடையை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துக் கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த ஒருவர் ‘வருங்கால எம்ஏவை ஏன் இப்படி கொடுமைப் படுத்துகிறீர்கள்’ எனக் கேட்டது சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

Source link