சென்னை: விஜய்யின் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு முதல்வர் விஜய் பரிசு வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
